search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் இணைக்கும் பணி"

    • மதுரையில் 34 மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியது.
    • இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணி, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பொதுமக்கள் இணைய தளம் மூலம் ஆதார் எண்ணை மின் இணைப்பு நம்பருடன் இணைத்தனர். ஒரே நேரத்தில் பெரும்பா லானோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முயன்றதால், மின்வாரிய இணைய தளத்தின் சர்வர் முடங்கியது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. அதில் 'பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநில அளவில் 2 ஆயிரத்து 811 அலுவலங்களிலும் இன்று(28-ந் தேதி) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 மின்வாரிய அலுவல கங்களிலும் சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. பண்டிகை தினங்கள் தவிர ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை இந்த முகாம் செயல்படும்.

    பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

    மதுரை அரசரடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இன்று ஆதார் எண்ணை இணைப்பதற்காக கூட்டம் அலைமோதியது. இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ஆதார் எண்ணை இணைக்கும் போது தற்போதைய மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் அரசுக்கு கிடைக்கும். பெயர் மாற்றமும் செய்ய இயலும். மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் வராது.

    அதேபோல கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களுக்கான மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் தொடரும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    ×