search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டு சந்தை"

    • பொங்கலை முன்னிட்டு நடந்தது
    • வழக்கமாக 11 மணிக்கு முடியும் சந்தை 1 மணி வரை நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கி ழமை சந்தை நடைபெற்று வருகிறது.

    சூடு பிடித்த ஆட்டு சந்தை

    இங்கு காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரைகள், கடலை, தினை வகைகள் என விதவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படும். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த பொருட்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்வார்கள்.

    குறிப்பாக ராணிப் பேட்டை ஆட்டுச்சந்தை மிக வும் பிரபலமானது. ராணிப்பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் விற்பனைக்காக ஆடுகளை சந்தைக்கு கொண்டு வருவார்கள். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபு ரம், திருவள்ளூர், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடு களை வாங்க வருவார்கள். பண்டிகை காலங்களில் இந்த ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்படும்.

    வழக்கம்போல நேற்று ஆட் டுசந்தை நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஆட்டுச்சந்தை மிகவும் பரபரப்புடன் காணப்பட் டது. வழக்கத்தை விட அதிக மான ஆடுகள் மினி லாரி, வேன்களில் அதிகாலையிலேயே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள், ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஆடுகளின் எடை, தரத்திற்கு தகுந்தபடி பேரம் பேசி போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். குட்டி ஆடுகள் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5,000 வரை விலைபோனது. நடுத்தர ஆடுகள் ரூ.7 ஆயிரத் தில் இருந்து ரூ.10,000 வரையி லும், பெரிய ஆடுகள் அதிக பட்சமாக ரூ.15,000 வரையி லும் விலை போனதாக வியா பாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    இந்த ஆட்டுச் சந்தையில் வழக்கமாக ரூ.50 லட்சம் வரை வியாபாரம் நடைபெ றும். ஆனால் நேற்று ரூ.1கோடியே 25 லட்சம் வரை வியாபாரம் நடந்தது. சுமார் 1,500 ஆடுகள் விற்பனையானது.

    • செஞ்சி வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கி ழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் பெரும்பாலும் விவசாய நிலங்களிலும், மலைப்பகுதி யிலும் மேய்க்கப்பட்டு வளர்க்கப்படுவதால் செஞ்சி பகுதியில் உள்ள ஆடுகளை வாங்க தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரி கள் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம்.

    வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று நடை பெற்ற வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தைக்கு விவசாயி கள் மற்றும் ஆடுகளை வளர்ப்பவர்களும் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த னர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் ரூ. 5 கோடி வரை விற்பனை அமோகமாக நடைப்பெற்றது. சுமார் 4 மணி நேரத்திலேயே ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளும் ஆடு வளர்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்த னர்.

    • விராலிமலையில் ஆட்டு சந்தை களை கட்டியுள்ளது
    • வர்த்தகம் ஒரு கோடியை தாண்டியது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவது வழக்கம்.

    அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பாகும். இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளை இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும் போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இறைச்சிக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற விராலிமலை வார சந்தை வழக்கம் போல் இன்று அதிகாலை கூடியது. ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வர தொடங்கியதை தொடர்ந்து வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் விலையைப் பொறுத்தவரை சராசரியான தொகைக்கே ஆடுகள் விற்கப்பட்டன. காலை 7:30 மணி நிலவரப்படி ஒரு கோடியையும் தாண்டி வர்த்தகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

    ×