search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை மரணம்"

    • திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சென்ற போது ஆனந்தி திடீரென காருக்குள் மயங்கி விழுந்தார்.
    • அதிர்ச்சி அடைந்த கணவர் துரைராஜன் மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி டி.இ.எல்.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் துரை ராஜன். இவரது மனைவி ஆனந்தி (வயது 59) இவர் திருக்காட்டுப்பள்ளி செய்யமங்கலம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிகள் இருந்தன. இதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே ஆனந்தி தனது கணவருடன் திருச்சி கே.கே. நகரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்தனர். பின்னர் கணவன்- மனைவி இருவரும் கார் மூலம் திருக்காட்டுப்பள்ளிக்கு புறப்பட்டனர்.

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சென்ற போது ஆனந்தி திடீரென காருக்குள் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த கணவர் துரைராஜன் மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஆனந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக துரைராஜன் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மகன் தீபக் (வயது 27). இவர் ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டாக தீபக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் வயிற்று வலி தீரவில்லை.

    அதைத் தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த தீபக் ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது பெற்றோர்கள் அவரைக் காப்பாற்றினர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அருகாமையில் வசிக்கும் தனது மாமனார் சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் தீபக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக அவரது தந்தை செல்வேந்திரன் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×