search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய விளையாட்டு போட்டி"

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsiansGames2018 #PMModi
    ஜகர்த்தா :

    ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தம் மற்றும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா பதக்கங்களை வென்றுள்ளது.

    இதனால், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ட்விட்டர் மூலமாக பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதலில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டிலா இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

    வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை முதலில் துவத்தி வைத்த ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டிலா இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.



    இதைத்தொடர்ந்து,  மல்யுத்தத்த போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவை பாராட்டியும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    ஆசிய விளையாட்டு போட்டிகளின் இரண்டாம் நாளில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் மங்கோலியா மற்றும் தாய்லாந்துடன் 9-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.#AsiansGames2018 #PMModi
    இந்தோனேசியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டி ஜோதியை ஏந்திச் செல்லும் தொடர் ஒட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
    புதுடெல்லி :

    இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பலேம்பங்க் ஆகிய இடங்களில் ஆசிய விளையாட்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. போட்டி நடைபெறுவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு போட்டிக்கான ஜோதி ஏற்றப்பட்டு தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படும்.

    அங்குள்ள முன்னாள் இன்னாள் வீரர்கள் வீராங்கனைகள் ஜோதியை ஏந்திச் செல்வார்கள். போட்டியின் தொடக்க விழா நிகழ்சியின்போது பெரிய ஜோதி ஏற்றிவைக்கப்படும்.

    இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்தோனேசியா ஆசிய விளையாட்டு போட்டிக்கான கமிட்டியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதில் முதன்முறையாக ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்ற இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து ஜோதி பேரணி நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டிற்கான ஜோதியை கொண்டு செல்லும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் விளையட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஸ்ரீஜேஷ் மற்றும் பிற விளையாட்டு பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
    ×