search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகியமண்டபம்"

    • அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • தனியாக தொழில் முனைய விரும்புவோர், குழுவாக தொழில் செய்ய விரும்புவோர், பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை விரும்புவோர் என 3 பிரிவுகளாக பயிற்சி

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி யிலிருந்து விதவைகள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், மற்றும் முதிர்கன்னிகள் ஆகியோருக்கான பட்டியல் தயார்படுத்தப்பட்டு அவர்களில் ஆர்வமுடை யோருக்கு அழகிய மண்ட பத்தில் வாழ்வாதார பயிற்சி வழங்கப்பட்டது.

    இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். மனோஜ்குமார் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், மாவட்ட அவை தலைவர் மரிய சிசு குமார், மாவட்ட துணைசெயலாளர் ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரசம் ஜெயராஜ் தொடக்க உரையாற்றினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி சிறப்புரை ஆற்றினார்.

    தனியாக தொழில் முனைய விரும்புவோர், குழுவாக தொழில் செய்ய விரும்புவோர், பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை விரும்புவோர் என 3 பிரிவுகளாக பயிற்சியில் பங்கேற்றவர்கள் பிரிக்கப்பட்டு சென்னை றிவர் பெண்கள் முன்னேற்ற அமைப்பின் இயக்குனர் மதுசரண் தலைமையில் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    பேரூராட்சி தலைவர்கள், ஹாருன் ரசீத், கிறிஸ்டல் பிறேமகுமாரி, பெனிலா ரமேஷ், ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய், ஆகியோர் பயிற்சியின் தேவைகள் குறித்து பேசினர். ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த கூட்ட ஒழுங்குகளை பேரூராட்சி கவுன்சிலர் விக்னேஷ் செய்தார். சுமிதா நன்றி கூறினார்.

    ×