search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகிப் போட்டி"

    • 10 வயதிலேயே மேடையில் அச்சமின்றி தோன்றி, மாநில, தேசிய, ஆசிய அளவில் அழகிப்போட்டியில் விருதுகளை வென்று அசத்தியுள்ளார் சிறுமி.
    • பட்டத்தை வென்ற ஆத்யாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    சாதனைக்கு வயது தேவையில்லை... திறமையிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது பல சமயத்தில் பலரால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் உறுதிபடுத்தி உள்ளார் 10 வயது இந்திய சிறுமி.

    மேடை ஏற தயங்கும் பலரது மத்தியில் 10 வயதிலேயே மேடையில் அச்சமின்றி தோன்றி, மாநில, தேசிய, ஆசிய அளவில் அழகிப்போட்டியில் விருதுகளை வென்று அசத்தியுள்ளார் இந்த சிறுமி.

    துபாயில் நடைபெற்ற 'பிரின்சஸ் ஆப் இந்தியா' பட்டத்தை வென்றுள்ள இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தச் சாதனைக்கு சொந்தக்காரியான சிறுமியின் பெயர் ஆத்யா. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குரும்பஞ்சோலை பகுதியைச் சேர்ந்த ஜிம்மி-விஜி தம்பதியரின் மகள் ஆவார்.

    இவர் வயதையொத்த சிறுமிகள், செப்புச் சாமான்கள் வைத்து விளையாடிய போது, ஆத்யா தொலைக்காட்சிகளில் வரும் பேஷன் ஷோக்களை ஆர்வத்துடன் பார்த்து வந்துள்ளார்.

    அதில் வருபவர்களை போல ஆத்யாவும் நடை, உடை, பாவனைகளை காட்டி அனைவரையும் அசர வைத்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர், மகளை உற்சாகப்படுத்தி உள்ளனர். இதனால் சிறு சிறு போட்டிகளில் பங்கேற்று வந்த ஆத்யா, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார்.

    கேரள மாநிலம் மலபாரில் நடந்த அழகிப் போட்டியில், இடுக்கி மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு பரிசினை வென்றார். தொடர்ந்து திருச்சூரில் நடந்த இண்டர்நேசனல் போட்டியில் பங்கேற்று 2-வது இடத்தை பிடித்தார்.

    அதன் பயனாக சமீபத்தில் துபாயில் நடந்த 'பிரின்சஸ் ஆப் ஆசியா' போட்டியில் பங்கேற்க தேர்வானார். இதில் அவரது செயல்பாடு பலரையும் கவர்ந்தது. முடிவில் எதிர்பார்த்தது போல் 'பிரின்சஸ் ஆப் ஆசியா' பட்டத்தை வென்று ஆத்யா அசத்தினார். 10 வயதிலேயே இந்தப் பட்டத்தை வென்ற அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    சாதனை சிறுமியின் தாயார் விஜி கூறுகையில், சிறு வயதில் இருந்தே ஆத்யா அழகிப்போட்டிகளை பார்ப்பதில் ஆர்வம் காட்டினாள். அதில் நடந்து வருபவர்களை போல் அவளும் நடந்து காட்டினாள். அவரது ஆர்வத்தை பார்த்து நாங்கள் ஊக்கப்படுத்தினோம்.

    அதன் பயனாக இன்று 'ரைசிங் ஸ்டார்', 'பேஸ்புக் ஸ்டார்', 'பிரின்சஸ் ஆப் ஆசியா' என 3 விருதுகளை 10 வயதிலேயே பெற்று சாதனை படைத்துள்ளார் என்றார். 

    ×