search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலிகான் துக்ளக்"

    கடமான் பாறை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், அப்பா இயக்கத்தில் நடிப்பது சிரமமாக இருந்ததாக கூறினார். #KadamanParai #AliKhanThuglak #MansoorAliKhan
    மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக். கடமான் பாறை படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். துக்ளக் அளித்த பேட்டியில் இருந்து, படிப்பு முடித்தபிறகு நடிக்க வரவே விரும்பினேன்.

    ஆனால் இந்த படத்துக்கு கல்லூரி மாணவர் வயது கதாநாயகன் தேவை என்பதால் அப்பா வற்புறுத்தி நடிக்க வைத்துவிட்டார். அப்பா இயக்கத்தில் நடித்தது சிரமமாக இருந்தது. மொபைலுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி இருப்பதை மையமாக வைத்து திரில்லர் படமாக உருவாகி உள்ளது.



    சினிமாவுக்காக சண்டை, நடிப்பு, நடன பயிற்சிகள் எடுத்துள்ளேன். எதிர்காலத்தில் நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகன் என்று பெயர் எடுக்க வேண்டும். பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசை. இவ்வாறு அவர் கூறினார். #KadamanParai #AliKhanThuglak #MansoorAliKhan

    மன்சூர் அலிகான் இயக்கி நடித்து, அவரது மகன் அலிகான் துக்ளக்கை நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கும் `கடமான்பாறை' படத்தின் முன்னோட்டம். #Katamanparai #MansoorAlikhan
    பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன், பல படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு `கடமான்பாறை' என்று பெயரிட்டுள்ளார்.

    மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூர் அலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். 

    கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.  

    ஒளிப்பதிவு - மகேஷ்.டி, இசை - ரவிவர்மா, பாடல்கள் - விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூர் அலிகான், கலை -  ஜெயகுமார், நடனம் - டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் - ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் - ஜே.அன்வர்
    ஒருங்கிணைப்பு - ஜே,ஜெயகுமார், எழுத்து, இயக்கம் - மன்சூர் அலிகான். 



    படம் பற்றி மன்சூர் அலிகான் கூறும்போது 

    ‘கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி கஞ்சமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பனான என்னிடம் மாட்டிக்கொள்கிறார்கள். 

    என்னிடம் பாரஸ்ட் ரேஞ்சர் மாட்டிக்கொண்டால் கூட உயிரோடு திரும்ப முடியாது. அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா, இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்’ என்றார். #Katamanparai #MansoorAlikhan

    ×