search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னையர் தின வாழ்த்து"

    • பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம்கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், காங்கிரஸ் தலைவர் தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனது தாய் சோனியா காந்தி மற்றும் பல பெண்களுடன் தனது உரையாடல்கள் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில்," அன்னை என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு -- பாசம், தியாகம், பொறுமை மற்றும் வலிமை. அன்னையர் தினமான இன்று, அனைத்து தாய் சக்திக்கும் வணக்கம் செலுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ. ஒரு லட்சம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மகாலக்ஷ்மி திட்டம் மற்றும் மத்திய அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றை காங்கிரஸ் தனது மக்களவை தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×