search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும்"

    • தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேஷன் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது.
    • பஞ்சாயத்து செயலாளர்கள் ஒரு முனை தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள இணைப்பு வழங்கக்கூடிய பாரத்நெட் திட்டத்தில், 2-ம் கட்டமாக, தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேஷன் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது.

    இதற்காக ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது. இக்கேபிள், 85 சதவீதம் மின் பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாக அமைக்கப்பட உள்ளது.

    இப்பணி நிறைவ டைந்ததும், கிராமங்களில் அகண்ட அலைவரிசை இணைப்புகள், 'வைபை' வசதி, தனி நபர் வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், அகண்ட அலைவரிசை இணைப்புகளை குத்த கைக்கு விடுதல், செல்போன் டவர்களுக்கு இணைப்பு வழங்குதல் போன்ற முன்னேறிய தொழில் நுட்ப வசதி ஏற்படுத்தப்படும்.

    அனைத்து பஞ்.களிலும் கிராம ஊராட்சி சேவை மையங்கள், வட்டார வளர்ச்சி சேவை மையங்கள் இத்திட்டத்தின் இருப்பு புள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.

    இச்சேவை மையங்களில் இருந்து, 3 கி.மீ., சுற்ற ளவுக்கு அனைத்து அரசு அலுவலக கட்டடங்களிலும் உள்ள இணைய தள வசதிகள் கணக்கெடுக்கப்ப ட்டு வருகிறது.

    இப்பணி முடிந்ததும் பஞ்சாயத்து சேவை மையங்களில் இருந்து ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம், 1 ஜி.பீ.பி.எஸ்., அதிவேக இன்டெர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு, பஞ்சாயத்து செயலாளர்கள் ஒரு முனை தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

    வருவாய் துறை, வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த திட்ட உதவிகள், மானி யங்கள் பெற இ–சேவை மையங்கள் மூலம் மக்கள் விண்ணப்பிக்கின்றனர்.

    ஊரக வளர்ச்சி துறை மூலம் பஞ்சாயத்துகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் மற்றும் கட்டட அனுமதி ஆகிய வற்றுக்கான கட்டணங்களை ஆன்லைன் மூலமே மக்கள் செலுத்த அரசு உத்தர விட்டுள்ளது.

    அரசு பணிகள் அனை த்தும் டிஜிட்டல் மயமாக மாறி உள்ளதால், அனைத்து பஞ்., பகுதிகளுக்கும் விரை வான அதிவேக இன்டெர்நெட் சேவை கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல்பாட்டுக்கு அனைத்து தரப்பு மக்கள், விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    ×