search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக நிர்வாகிகள் கூட்டம்"

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பையில் நடைபெற்றது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பையில் நடைபெற்றது. ஸ்ரீபெரும் புதூர் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி முன்னிலை வகித்தார். குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமசந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    அமைப்பு செயலாளர்கள் சோமசுந்தரம், மைதிலி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாவட்ட அவை தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் அத்தி வாக்கம் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ஜீவானந்தம், அக்ரி நாகராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில்ராஜன், முன்னாள் சேர்மன் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், செங்காடு பாபு, ஒன்றிய பொருளாளர் பண்ருட்டி அர்ஜூனன், மாவட்ட பாசறை துணை செயலாளர் மணிகண்டன், மாங்காடு நகர இளைஞர் அணி செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK
    ×