search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கடி பழுதாகி"

    • வாகனங்கள் பழுதாகி நின்று கடும் போக்கு வரத்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ஓட்டுநர் உரிமத்தை சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் டாரஸ் லாரிகள், பாரங்கள் ஏற்றி வரும் லாரிகள் ஆசனூர் மற்றும் மாதேஸ்வரன் கோவில் மலைப்பாதை வழியாக அனுமதிக்க ப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை வழியாக அதிக அளவில் பாரம் ஏற்றி வரும் லாரிகள் வந்து செல்கிறது.

    இந்த நிலையில் இந்த மலைப்பாதை வழியாக வரும் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சாலையின் நடுவே அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வழித்தடம் புதியதாக இருப்பதால் வளைவுகள் முக்கிய இடங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்வதும் தொடர்கதையாக உள்ளது.

    கடந்த 30 நாட்களில் மட்டும் நாமக்கலில் இருந்து மைசூருக்கு செல்வதற்கு சோப்பு பாரம் ஏற்றி வந்த லாரி, கல்பாரம் ஏற்றி வந்த லாரி, நாமக்கலில் இருந்து மைசூருக்கு செல்வதற்காக பாரங்கள் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே பழுதாகி நின்று விடுவது அடிக்கடி நடக்கிறது. இதே போல் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதாகி நின்று கடும் போக்கு வரத்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ரோட்டில் பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட உள்ள சோதனைச் சாவடி பகுதி களில் வளைவுகள் அதிகமாக உள்ளது.

    எனவே வாகன ஓட்டிகள் வேக த்தை கட்டுப்படுத்தி மெதுவாக வாகனத்தை இயக்கிச் செல்லுங்கள் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் மது போதையில் இருக்கின்றார்களா? என்று மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வரட்டு பள்ளம் சோதனை சாவடியில் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுப்பப்படுகிறது.

    சோதனை செய்யும் போது வாகன ஒட்டிகளுக்கு அறிவுரை கூறி மலை பாதையில் மெதுவாக செல்லுங்கள். பின்னால் வரும் இரு சக்கர வாக னத்திற்கு வழி விடுங்கள். வளைவுகளில் ஒலிபெரு க்கியை (ஹாரன்)அடித்து வளைவில் வருபவர்களுக்கு தெரியும்படி செய்யுங்கள். வளைவுகளில் மற்றொரு வாகனத்தை முந்தி செல்லாதீர்கள் உள்ளிட்ட அறிவுரைகளை எடுத்துக் கூறிஅனுப்ப வேண்டும்.

    மேலும் வாகன டிரை வர்களின் ஓட்டுநர் உரிம த்தை சரி பார்த்து அனுப்ப வேண்டும். லாரியில் எத்தனை டன் அளவிற்கு ஏற்றி செல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு ஏற்றி செல்வதற்கு உண்டான இடை நிலையத்தில் சீட்டு களை வாகனத்தில் வைத்திருக்கிறார்களா என்பதையும் பார்த்து மலைப்பாதையின் மேலே அனுமதிக்க வேண்டும் என்று தன்னல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்.

    இது போன்ற நடவடிக்கை கள் எடுத்தால் விபத்துகளும் குறையும் என்றும், பழுதாகி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறையும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×