search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசுவமேதப் பிரதட்சிணம்"

    • ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும்.
    • திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.

    திருவிடைமருதூரில் மருதப் பெருமானை வழிபடுவதற்குக் கோவிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர்.

    இந்த அசுவமேதப் பிரதட்சிணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும்.

    ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும்.

    வலம் வருவதும் நூற்றி எட்டு, இருபத்து நான்கு, பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும்.

    திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.

    இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம்.

    கயிலாய மலையை வலம் வருவதாலாகும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.

    ×