search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி கட்டிடம்"

    • அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
    • பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மேற்கூரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு தரையில் தண்ணீர் தேங்குகிறது.

    இதனால் இந்த கட்டிடத்தில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    தற்போது அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதா வது, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்க ன்வாடி கட்டிடம் கட்டும் வரை மாற்று இடத்தில் அங்கன்வாடி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தன.

    இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நெல்வாய் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அனுக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜு, திமுக மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோ. ரவி, ஞானவேல், தினகரன், சங்கர், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், முன்னாள் சேர்மன் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெங்கடேஷ் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
    • கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி:

    இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட நியூ வெங்கடேஷ் நகர் பகுதியில் பூங்காவாக பயன்படுத்தி வரும் இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதையறி்ந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர், வாறுகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர போதுமான நிதி இல்லை எனக்கூறி வரும் ஊராட்சி நிர்வாகம், பூங்காவாக பயன்படுத்தி வந்த இடத்தில் அதிக நிதியை பயன்படுத்தி அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் எவ்வாறு நிதி வந்தது? அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்தவுடன் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததையடுத்து, புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×