search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WIvBAN"

    43 ரன்னில் சுருண்டதன் மூலம் 1974-க்குப் பிறகு குறைவான ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனைக்கு தள்ளப்பட்டது வங்காள தேசம். #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் சர் விவியன் ரிச்சர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வங்காள தேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிம் இக்பால் மற்றும் லித்தோன் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    தொடக்க ஓவரை கேமர் ரோச் வீசினார். மறுமுனையில் கேப்ரியல் வீசினார். முதல் நான்கு ஓவரை வங்காள தேச அணி தாக்குப்பிடித்து விளையாடியது. 5-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் தமிம் இக்பால் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வங்காள தேச அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

    அதன்பிறகு வங்காள தேச பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் வங்காள தேசம் 18.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 43 ரன்னில் சுருண்டது.



    இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 1974-ம் ஆண்டிற்குப்பிறகு சுமார் 44 வருடத்தில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமாக சாதனையை வங்காள தேசம் படைத்துள்ளது. அத்துடன் வங்காள தேச அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் என்பதையும் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் வங்காள தேச அணி இலங்கைக்கு எதிராக 2007-ல் 62 ரன்னில் சுருண்டிருந்தது. அதுவே மிகக்குறைந்த ஸ்கோராக இருந்தது. தற்போது இது குறைந்த ஸ்கோராக அமைந்துள்ளது.

    1974-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்திற்கு எதிராக 42 ரன்னில் சுருண்டதே மிகக்குறைந்த ஸ்கோராக இருந்தது. அதன்பின் தற்போது வங்காள தேசம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து 1955-ம் ஆண்டும் 26 ரன்னில் சுருண்டதே குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும். அதன்பின் தென்ஆப்பிர்க்கா இங்கிலாந்திற்கு எதிராக 30 ரன்னில் இரண்டு முறையும், 35 ரன்னில் ஒரு முறையும் ஆல்அவுட் ஆகியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 1932-ல் 36 ரன்னில் சுருண்டுள்ளது.



    1902-ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு எதிராக 36 ரன்னில் சுருண்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நியூசிலாந்து 1946-ல் 42 ரன்னிலும், 1988-ல் இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 42 ரன்னிலும், இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக 1974-ல் 42 ரன்னிலும் ஆல்அவுட் ஆகியுள்ளன. தற்போது வங்காள தேசம் 43 ரன்னில் ஆல்அவுட் ஆகியுள்ளன.
    ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயத்தால் வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்துள்ளார். #WIvBAN
    வங்காள தேச அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது வலது கால் பெருவிரல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இந்த காயத்திற்கான சிகிச்சையை முஷ்டாபிஜூர் ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாட இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டது. இதில் முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்த காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவில்லை. ‘‘ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இரண்டாவது டெஸ்டிற்கு முன் முஷ்டாபிஜூர் ரஹ்மான் குணமடைய முடியும். இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’’ என்று அணியின் தலைமை தேர்வாளர் அபேடின் தெரிவித்துள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ்- வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூலை 4-ந்தேதி ஆண்டிகுவாவிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி ஜமைக்காவிலும் தொடங்குகிறது.

    மூன்று டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ள வலது கை வேகப்பந்து வீச்சாளர் அபு ஜாயத் முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #WIvBAN
    வங்காள தேசம் அடுத்த மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

    டெஸ்ட் தொடர் ஜூலை 4-ந்தேதி முதல் ஜூலை 16-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.



    வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), 2. தமிம் இக்பால், 3. இம்ருல் கெய்ஸ், 4. முஷ்பிகுர் ரஹிம், 5. மெஹ்முதுல்லா, 6. லித்தோன் தாஸ், 7. மொமினுல் ஹக்யூ, 8. மெஹிதி ஹசன், 9. தைஜூல் இஸ்லாம், 10. கம்ருல் இஸ்லாம் ரஃபி, 11. ருபெல் ஹொசைன், 12. நுருல் ஹசன், 13. அபு ஜெயத் சவுத்ரி, 14. நஸ்முல் ஹொசைன் ஷன்டோ, 15. ஷபியுல் இஸ்லாம்.
    ×