search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "withdrawal"

    சிரியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்தும் சுமார் 7000 படை வீரர்களை திரும்ப பெறுவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. #USTroopWithdrawal #Afghanistan
    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்க 2001-ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டன. இந்த படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டு நேட்டோ படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டன.

    எனினும் ஒரு சில பகுதிகளில் தலிபான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தனர். எனவே, ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க படைகள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.



    தற்போது அமெரிக்க ராணுவ வீரர்களில் 14000 பேர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, அந்நாட்டு வீரர்களுக்கு போர் பயிற்சியும், ஆலோசனைகளும் தாக்குதல்களுக்கு உதவியும் புரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போதைய கள நிலவரத்தை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களில் பாதி பேரை திரும்ப பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்தகவலை பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக டிரம்ப் முடிவெடுத்தபோது ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளை திரும்ப பெறுவது குறித்தும் முடிவு எடுத்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அநேகமாக கோடைக்காலத்தின்போது படைகள் திரும்ப பெறப்படலாம், ஆனால் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மற்றொரு அதிகாரி கூறியிருக்கிறார். #USTroopWithdrawal  #Afghanistan

    பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை, (நாளை 31-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. #SBI #SBIDebitCards #ATM
    புதுடெல்லி:

    பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏ.டி.எம். மெஷின்களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை இருபதாயிரம் ரூபாயாகக் குறைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏ.டி.எம். அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு (நாளை முதல்) 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் பாரத ஸ்டேட் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.



    பாரத ஸ்டேட் வங்கி மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. #SBI #SBIDebitCards #ATM 
    ×