search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waterfowl"

    • கணக்கெடுக்கும் பணி பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
    • மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.

    கோவை,

    கோவையில் இன்று ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன் படி, 2022-2023-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    நீர் பறவைகளின் கணக்கெடுப்பு பணி இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை ) ஆகிய நாட்களில் நடக்கிறது. நிலப்பற வைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற மார்ச் மாதம் 4 மற்றும் 5 -ந் தேதிகளிலும் நடத்தப்படுகிறது.

    இந்த பறவைகள் கணக்கு எடுக்கும் பணிக்காக தொடர் கண்காணிப்பு பணி மேற் கொள்ள வேண்டி உள்ளதால், நீர் பறவைகளுக்கு என 20 இடங்களிலும், நிலப் பற வைகள் கணக்கு எடுப்பதற்காக மாவட்டந்தோறும் 20 இடங்களிலும் கணக்கெடுப்பு பணி மே ற்கொள்ளப் படுகிறது.

    கோவையை பொறுத்தவரை, நீர் பறவைகளுக்கு என, வாளையார், செம்மேடு உக்குளம், பேரூர், உக்கடம், குறிச்சி, செங்குளம், கிருஷ்ணாம்பதி, வெள்ளலுார், சிங்காநல்லுார், பள்ளிபாளையம், கண்ணம்பாளையம், ஆச்சான்குளம், சூலுார், பெத்திக்குட்டை, செல்வம்பதி, நரசம்பதி, இருகூர் குளம், வேடப்பட்டி, காளப்பட்டி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த கணக்கெடுப்பில், பறவை ஆர்வலர்கள், பள்ளி மற் றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ×