search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volleyball Tournament"

    • தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் கைப்பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

    கரூர்:

    வேட்டமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கும், அதே கல்லூரியில் போலீஸ் பயிற்சி சென்டரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கும் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தீயணைப்பு பயிற்சி வீரர்கள் வெற்றி பெற்றனர். பயிற்சி மாணவர்கள் 2 வது இடத்தை பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

    • ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி 6-ந் தேதி தொடங்குகிறது.
    • போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட கைப்பந்துக் கழகத்தின் தலைவர் செல்வகணேஷ், பொருளாளர் துரை சிங், தலைமையக செயலாளர் பொன்னியின்செல்வன், பொருளாளர் விநாயகமூர்த்திஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் திட்டங்களில் ஒன்றான மாநில யூத் சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது.

    இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்கை சேர்ந்த ஆண், பெண் அணிகள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த போட்டிகள் விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பாக வருகிற 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், ராம்கோ ஊர்காவல்படை மைதானத்தில் நடைபெறும்.

    இந்த போட்டிகளுக்காக 5மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 3 மைதானங்களில் மின் ஒளி வசதி செய்யப்பட்டுள்ளது.

    போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போட்டிகளின் தொடக்க விழா போட்டி வருகிற 6-ந்தேதியன்று மாலை 3 மணி அளவில் நாடார் மேல்நிலை பள்ளியில் நடைபெறும்.

    இதில் 1000 போட்டி யாளர்கள், 50 நடுவர்கள் மற்றும் தேர்வுகுழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசிக்க காலரி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×