search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijayadashami"

    • நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, 10-வது நாளன்று குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் புனித நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
    • கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள்.

    நெல்லை:

    நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, 10-வது நாளன்று குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் புனித நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    வித்யாரம்பம் நிகழ்ச்சி

    கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள். மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம்.

    அதன்படி இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இன்று தனியார் பள்ளிகளில் வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    டவுன் சரஸ்வதி கோவில்

    டவுன் காந்திமதி அம்பாள் கோவில் எதிரே உள்ள சரஸ்வதி கோவிலுக்கு இன்று ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். அங்கு படிப்பை தொடங்குவதற்கு குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுதினர்.

    சிலர் மஞ்சள் துண்டு களைக் கொண்டு குழந்தை களின் கையை பிடித்து அரிசியில் எழுத்துக்களை எழுதினர்.

    இதேபோல் மாவட்டம் முழு வதும் தனியார் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக காலை முதல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.

    விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி

    விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. பள்ளியில் புதிய மாணவ-மாணவிகளுக்கு அட்சராப்பியாசம் வழங்க ப்பட்டது.

    பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், முதன்மை முதல்வர் ராஜலட்சுமி, முதல்வர் முருகவேள், துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

    ஜெயேந்திரா பள்ளி

    பாளை மகாராஜா நகரில் உள்ள ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மேல்நிலைப் பள்ளியில் 3 வயது குழந்தைகளுக்கான வித்யாரம்பம் மழலையர் சேர்க்கை இன்று நடைபெற்றது.

    இதனையொட்டி அந்த பள்ளி மற்றும் பெருமாள் புரம் லலிதா வித்யாஷ்ரம், வி.எம்.சத்திரம் ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் வித்யா கேந்திரா ஆகிய பள்ளிகளில் சேர்ப்பதற்காக சுமார் 70 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வந்திருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜெயேந்திர பள்ளி குழுமங்களின் இயக்குனர் ஜெயந்திரன் மணி, பள்ளி முதல்வர் மற்றும் டீன் ஜெயந்தி ஜெயந்திரன் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் ஏராளமான தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    • திண்டுக்கல்லில் இன்று விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வியை போதிக்கும் நிகழ்ச்சியை தொடங்கினர்.
    • வழிபாடு நடத்தி அரிசி மற்றும் நெல்லில் குழந்தைகள் அகர வரிசையின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தனர்.

    திண்டுக்கல்:

    விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தலை தொடங்கும் வித்யாரம்பம் நடத்தப்படுவது வழக்கம். திண்டுக்கல்லில் இன்று விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வியை போதிக்கும் நிகழ்ச்சியை தொடங்கினர்.

    சரஸ்வதி படம் முன்பு தேங்காய், பழம், மஞ்சள்குங்குமம் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்தி அரிசி மற்றும் நெல்லில் குழந்தைகள் அகர வரிசையின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுத வைத்தனர். மேலும் குழந்தைகளின் நாக்கிலும் கல்விக்கான போதனையை தொடங்கும் வகையில் அகர எழுத்துக்களை எழுதினர்.

    பல்வேறு மழலையர் பள்ளிகளில் காலை முதலே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது. கல்விக்குரிய கடவுள்களான சரஸ்வதி மற்றும் ஹயகிரீவர் படங்களை வைத்து அதன்முன்பு குழந்தைகளை அமரவைத்து கணபதி நாமத்தை தொடங்கி விரலிமஞ்சளால் அகர எழுத்துக்கள் எழுத வைக்கப்பட்டன.

    முன்னதாக இதற்காக சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

    விஜயதசமியான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
    அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா
    ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
    யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
    ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா

    பொருள் :

    அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.
    ×