search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "venthankulam renovation"

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மைய மண்டபத்தில் நடைபெற்றது
    • குப்பைகளை சேகரிக்க ரூ.8.45 கோடியில் உபகரணங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மைய மண்டபத்தில் நடை பெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    பின்னர் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநகர பகுதியில் 22 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கும், ரூ.370 கோடியில் மேற்கு புறவழிச்சாலை திட்டம் தந்தமைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

    மாநகரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாதாள சாக்கடை திட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தின் கீழ் ரூ.91.91 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குப்பைகளை சேகரிக்க ரூ.8.45 கோடியில் உபகரணங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    மண் சாலை

    தார் சாலையாக மாற்றம்

    மாநகராட்சிக்குட்பட்ட 57.36 கிலோ மீட்டர் சாலை களில் மழை காலங்களில் போக்கு வரத்துக்கு சிரமமாக உள்ளதால் 37.78 கிலோ மீட்டர் நீளமுள்ள மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்ற ரூ.77.67 கோடியில் மதிப்பீடு தயார் செய்து நிர்வாக அனுமதி வழங்குவது,

    மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தலைமை நீரேற்றும் நிலையங்களிலும் குடிநீர் நீரேற்றும் பணிகள் தடையின்றி நடைபெற கூடுதலாக 55 மாற்று மின் இயக்கிகள் ரூ.3.79 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்வது, சிந்துபூந்துறை மற்றும் வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடையை ரூ.1 கோடி மதிப்பீட்டில் திரவ பெட்ரோலிய வாயு (எல்.பி.ஜி.) தகன மேடையாக மாற்றி அமைத்தல், மேலப்பாளையம் 52-வது வார்டுக்குட்பட்ட மயானத்தின் அருகில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக திரவ பெட்ரோலிய வாயு தகன மேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல்,

    வேய்ந்தான்குளம் சீரமைப்பு

    வேய்ந்தான்குளத்தை ரூ.71.40 லட்சத்திலும், காந்திநகர் பம்பன்குளத்தில் ரூ.1.92 கோடியிலும் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய மேயர் சரவணன், மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவுற்றுள்ளது. தற்போது சோதனை ஓட்டமாக அனைத்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் நீரேற்றம் செய்தும், அதன்மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தும் சோதனை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இன்னும் ஓரிரு வாரங்களில் பணிகள் அனைத்தும் முடிவுற்று பொதுமக்களுக்கு தேவை யான தண்ணீர் தடையின்றி வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.

    12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி கூறும ்போது, உடையார்பட்டி எரிவாயு தகனமேடையின் மேற்கூரை இடிந்துள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மதுரை ரோட்டில் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படால் உள்ள கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    6-வது வார்டு கவுன்சிலர் பொன்ராஜ் கூறும்போது, மின் பராமரிப்பு பணியின் போது சாலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணியாளர்கள் அதனை அப்படியே விட்டு செல்கின்றனர். எனவே அதனை அகற்ற வேண்டும் என கூறினார்.

    இதே போல் பல்வேறு வார்டு உறுப்பினர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ×