search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaitha Maneethi Perumal Temple"

    • தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவு இந்திர வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.
    • 10-ம் நாள் திருவிழாவான 19-ந்தேதி காலை 7.20 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல், அதைதொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் நவதிருப்பதி தலங்களில் 8-வது ஸ்தலமானதும், செவ்வாய் ஸ்தலமும் நிதியை இழந்த குபேரனுக்கு அவனிழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த தலமாகும்.

    இங்கு வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் ஸ்ரீமதுரகவி ஆழ்வார் அவதரித்த ஸ்தலமும் ஆகும்.

    திருவிழா

    இக்கோவிலில் ஆவணி பெருந்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தரு ளல், இரவு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம் யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது

    கருடசேவை

    14-ந்தேதி (வியாழக்கிழமை) 5-ம் நாள் திருவிழா அன்று கருட சேவையை முன்னிட்டு வைத்தமாநிதி பெருமாள் கருடவாகனத்திலும், ஸ்ரீமது ரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 9-ம் திருவிழா நாளான 18-ந்தேதி (திங்கட்கிழமை) சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி மதுரகவி ஆழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் மங்களாசனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    9-ம் திருவிழா நாளான 18-ந்தேதி அன்று மாலை 7 மணிக்கு தேர் கடாஷித்தல், பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான 19-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 7.20 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று இரவு 6 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    11-ம் திருவிழாவான (புதன்கிழமை) 20-ந்தேதி பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, இளநிலை பணியாளர் பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்க டாச்சாரி, கோவில் ஸ்தலத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    ×