search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urban Health Centers"

    • தூத்துக்குடி மாநகராட்சியில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப் பட்டுள்ள 500 நல வாழ்வு மையங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் .

    இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி தெற்கு பகுதி முத்தையாபுரத்தில் உள்ள நகர்புற நல வாழ்வு மைய திறப்பு விழாவில் தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, அரசு மருத்துவர் டாக்டர் சூரிய பிரகாஷ், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி, 54-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் முத்துவேல், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், தூத்துக்குடி மாநகர தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகனி விஜயகுமார் மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகி கள், சுகாதாரத்துறையினர், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    ×