search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UK Flight"

    இங்கிலாந்து விமானத்தில் லக்கேஜ் மாயமானதால் சென்னை வியாபாரிக்கு ரூ.90 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பெசன்ட்நகரை சேர்ந்தவர் சுமந்த் சுப்ரமணியன். வர்த்தகரான இவர் மருத்துவ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தனது மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் சென்றார்.

    இவர்கள் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் வழியாக வாஷிங்டன் சென்றனர்.

    சென்னையில் இருந்து புறப்பட்ட போது பல முக்கியமான அலுவலக ஆவணங்கள், சி.டி.க்கள், மருத்துவ அறிக்கைகளையும், பொருட்களையும் உடன் 3 பேக்குகளில் எடுத்து சென்றனர்.

    விமானம் அமெரிக்காவின் வாஷிங்டன் டல்லெஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது அவர்கள் எடுத்து சென்றவற்றில் ஒரு ‘பேக்’கை மட்டும் காணவில்லை. அதில் சுமந்த் சுப்ரமணியன் மனைவிக்கு சொந்தமான ஆவணங்கள், டிசைனர் கைப்பை, 50 டிசைனர் துணிகள், விலை உயர்ந்த ஆடைகள், அழகு சாதன பொருட்கள், ஆபரணங்கள், கண் கண்ணாடிகள், மற்றும் தங்க நகைகள் இருந்தன.

    அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம். இச்சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நடந்தது.

    அதை தொடர்ந்து தனது லக்கேஜ் மாயமானது குறித்து கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சுமந்த் சுப்ரமணியன் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு எந்தவித பதிலும் இல்லை.

    எனவே சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் விமானத்தில் ‘பேக்’ தொலைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் சேவையில் குறைபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனக்கு ரூ.19 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன மேலாளர் பதில் அளித்து இருந்தார். அதில், “விமான சேவையில் எந்த குறைபாடும் வைக்கவில்லை. 1972-ம் ஆண்டு விமான சட்டப்படி புகார்தாரருக்கு விமான நிறுவனம் நஷ்டஈடு எதுவும் வழங்க தேவை இல்லை என தெரிவித்து இருந்தார்.

    ஆனால் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு அமர்வின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர் கே.அமலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதன்படி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் பயணி சுமந்த் சுப்ரமணியனுக்கு ரூ.90 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டனர்.

    அதில், காணாமல் போன லக்கேஜில் இருந்த பொருட்களுக்கு ரூ.50 ஆயிரமும், பயணியின் மன உளைச்சலுக்கு ரூ.35 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    ×