search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tribal people"

    ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், இலவச திருமண நிகழச்சியில் பழங்குடியின மக்களுடன் கைகோர்த்து நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. #JharkhandCMDance
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியின மக்களுக்கான பிரமாண்ட திருமண நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் 350-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களுக்கு திருமணம் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரகுபர் தாஸ்  தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    திருமணம் முடிந்ததும் விழா மேடையில் இருந்து கீழே இறங்கிய ரகுபர் தாஸ், உற்சாக மிகுதியில் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடினார். பெண்களுடன் கைகோர்த்து அவர் ஆடியதைப் பார்த்த பொதுமக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    மக்களோடு மக்களாகக் கலந்து முதலமைச்சர் இவ்வாறு நடனம் ஆடியதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. #JharkhandCMDance


    28 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்க கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று பர்கூர் மலைப்பகுதி மற்றும் காளிமலை பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் மாநில தலைவர் வரதராஜு தலைமையில் திரண்டனர். மொத்தம் 800-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    28 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ்கள் தரவில்லை. இதனால் எங்களால் அரசு சலுகை, மானியம் என எதுவும் பெற முடியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் தங்களது குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கூறும் போது, ‘‘28 ஆண்டு காலமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். சாதி சான்றிதழ் கேட்டு பல முறை மனுக்கள் கொடுத்து விட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.

    ×