search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirupur heavy rain"

    திருப்பூரில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 3 மணி வரை இந்த மழை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது.

    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த 2 நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திருப்பூரில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 3 மணி வரை இந்த மழை விட்டு விட்டு கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அவினாசி சாலை, ஊத்துக்குளி சாலை, ஈஸ்வரன் கோவில் பாலம், எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதேபோல் தாராபுரம், பல்லடம், மூலனூர், காங்கயம், உடுமலை, அவினாசி, ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

    திருப்பூரில் 33 மி.மீ, காங்கயத்தில் 33 மி.மீ., தாராபுரம் 5.2 மி.மீ., மூலனூர் 8 மி.மீ., உடுமலை 3.20 மி.மீ., அவினாசி 28 மி.மீ., பல்லடத்தில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    திருப்பூரில் இன்று காலை வெயில் அடிக்க தொடங்கியது.

    ×