search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Temple Jewel Missing"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கமிட்டியை அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென ஐதராபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. பதவி நீக்கப்பட்ட முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறிய பல குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    ஏழுமலையானின் நகைகள் மாயம், ஆகம சாஸ்திரங்களுக்கு எதிராக அதிகாரிகளின் நடவடிக்கைகள், மடப்பள்ளியில் சுரங்கம். உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ரமண தீட்சிதர் கிளப்பி உள்ளார். இதனை தேவஸ்தானம் மறுத்துள்ளது.

    இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஐதராபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சில நகைகள் களவு போனதாகவும், காணாமல் போனதாகவும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அறங்காவலர் குழு, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் நகைகளை ஆய்வு செய்து, அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    எனினும் இந்த விவகாரம் குறித்து ஐதராபாத் ஐகோர்ட்டு, ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அந்த குழுவின் அறிக்கையை பக்தர்கள், பொதுமக்களுக்கு தெரியும்படி பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
    ×