search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager was killed"

    • பைக்கில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த கீழ்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 32) வேன் டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ராஜா நேற்று போளூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் அப்போது கலசபாக்கம் அருகே கரையாம்பாடி பகுதியில் வரும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பஸ் ராஜா மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ராஜா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது தடுமாறி கீழே விழுந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் பாகாயம் அருகே உள்ள பள்ளஇடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39) இவரது வீடு சாலை வரை அமைந்துள்ளது. இன்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது லாரி ஒன்று வந்தது. அந்த நேரத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் எதிர்பாராத விதமாக லாரி கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக லாரி டிரைவர் சிவாஜி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த மருதாலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (39), செந்தில் (38) இவர்கள் 3 பேரும் நேற்று அக்ராவரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பொன்னை ராணிப்பேட்டை சாலையில் எதிரே மண் ஏற்றி வந்த லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் ஏழுமலை வழியிலியே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    அசாம் மாநிலம் கல்யான்பூர் பகுதியை சேர்ந்தவர் தாலிப் அலி மகன் ஜெலில் அலி இவர் கேரளா மாநிலம் திருச்சூரில் கோழி கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அஸ்ஸாமிலிருந்து திருச்சூருக்கு ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

    அப்போது அவர் ேஜாலார்பேட்டை அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்தார். ேஜாலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
    • புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறுச்சி:

    சங்கராபுரம் அருகே ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் குமரேசன் (வயது 19). இவர் சம்பவத்தன்று அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பகண்டை கூட்டுரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் ரெட்டியார்பாளையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவில் எதிரில் இருந்த ஜல்லிகள் மீது இருசக்கர வாகனம் ஏறியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த குமரேசன் சேலம் குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி ஆனார்.
    • புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருண் (வயது 19), தொழிலாளி.இவர் ரிஷிவந்தியம் பெரிய ஏரியில் குளித்தபோது திடீரென அவரை காணவில்லை என உடன் வந்தவர்கள் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தியாகதுருகம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் இறங்கி மாயமான அருணை தேடினர். ஆனால் அவரை காணவில்லை. பின்னர் நேற்று மீண்டும் தேடும் பணி தொடங்கியது. இதில் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து கிராமமக்களும் சேர்ந்து தேடினர்.

    அப்போது இறந்த நிலையில் அருணின் உடல் மீட்கப்பட்டது. பின் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×