search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager died"

    • தன்னிடம் தகவல் தெரிவிக்காததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி,

    வாணியம்பாடி அருகே கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 25). இவர் வெளியூரில் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    தீபாவளி விடுமுறையையொட்டி ரஜினி ஊருக்கு வந்துள்ளார். அப் போது அவருடைய அண்ணன் ராஜே சுக்கு இன்னும் 2 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    தன்னிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததால் மனமுடைந்த ரஜினி வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள், செல்போன் ஆகியவை கிராமத்துக்கு அருகில் உள்ள பாப்பானேரி குளம் பகுதியில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் தாலுகா போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ரஜினியை பிணமாக மீட்டனர். உடலை தீயணைப்பு துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்குப்ப திவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அண்ணனின் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தம்பி உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 கிலோ மீட்டர் தூரம் உடல் இழுத்து வரப்பட்டது
    • பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

    வேலூர்:

    சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேவூர் பகு தியை தாண்டி வந்து கொண் டிருந்தது.

    வாலிபர் சாவு

    அப்போது ரெயி லில் சுமார் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் அடிப் பட்டு இறந்தார் . அவரது உடல் ரெயில் என்ஜினில் மாட்டிக்கொண்டது. இதையறிந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை நிறுத்தி உடலை மீட்க முயன்றனர்.

    இரவு நேரம் என்பதாலும், உடலை மீட்க முடியாததாலும் அந்த முயற்சியை கைவிட்டனர். பின்னர் ரெயிலை காட் பாடி ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இத னால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் என்ஜின் முன்பு சிக்கிய உடலுடன் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    பயணிகள் அதிர்ச்சி

    அப்போது ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் என் ஜின் முன்னால் உடல் இருந் ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் சிலர் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் காட்பாடியில் இருந்து 20 நிமிடங்கள் தாமதமாகரெயில் மங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் சுதாகர் (வயது 26) கட்டிடம் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

    விபத்து

    கடந்த புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சுதாகர் தனது வீட்டிலிருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பெரும்பாடி அருகே உள்ள துரைப்பட்டி என்ற கிராமத்துக்கு அருகே வரும்போது லட்சுமி (65) என்ற பெண் மீது மோதியதாக கூறப்படுகிறது.

    அப்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுதாகர் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    லட்சுமி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சுதாகரின் தாயார் பொன்னியம்மாள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் எனது மகன் சுதாகர் மோட்டார் சைக்கிளில் வரும்போது விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் எனது மகன் சுதாகரை சரமாரியாக தாக்கியதால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறியுள்ளார்.

    இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் சுதாகர் பரிதாபமாக இறந்தார். அந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இறந்து போன சுதாகரின் உறவினர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் விபத்து என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும்.

    விபத்து நடந்த போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதால்தான் சுதாகர் இறந்துவிட்டார் என கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி கிராம மக்களிடம் சுதாகரின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.

    இறந்துபோன சுதாகருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.

    • அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நியூ ஜலால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது முவம்மில் என்பவரின் மகன் முகமது மன்சூர் (வயது 19).

    சோமாலபுரத்தை சேர்ந்த இவரது நண்பர் சுஜாய் ( 20) ஆகிய இருவரும் கடந்த 28-ந் பைக்கில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தனர்.

    சுற்றுலா முடிந்து மலை உச்சியில் இருந்து கீழே இறங்கியபோது முன்னால் சென்ற பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். முகமது மன்சூர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாவல் பழத்துக்கு ஆசைப்பட்டு விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 35) சத்துவாச்சாரி கோர்ட்டில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனா (26) ஒரு வயதில் மகன் உள்ளார்.

    சத்துவாச்சாரி டபுள் ரோட்டின் நடுவில் நாவல் பழ மரங்கள் உள்ளன.இந்த மரத்திலிருந்து காற்றில் ஏராளமான பழங்ககள் கீழே விழுந்து கிடக்கின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் ரகுநாதன் ஒரு நாவல் மரத்தில் பழங்களை பறிக்க ஏறினார்.

    அப்போது பறித்து வைத்திருந்த பழங்களை பையில் போட்டு வந்தார். பழங்களை பறித்துக் கொண்டிருந்தபோது மழை பெய்ததன் காரணமாக கால் வழுக்கி மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரகுநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சத்துவாச்சாரி போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாவல் பழம் பறிக்கக சென்று உயிரை மாய்த்த ரகுநாதன் மனைவி மற்றும் குழந்தை தற்போது அவரை இழந்து தவித்து வருகின்றனர்.

    ×