search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thala virutcham"

    தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு.
    கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. ‘மூர்த்தி’ என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், ‘தலம்’ என்பது தலவிருட்சத்தையும் (மரம்), ‘தீர்த்தம்’ என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு.

    கோவில் தோன்றுவதற்கு முன்பே அந்த மரம் இருப்பதால், அதனை தலவிருட்சம் என போற்றுகிறோம். தீர்த்தம் எனப்படும் குளம், நீராடுவோரின் பாவத்தை போக்கி புண்ணியம் தருவதாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றிலுமே தெய்வசக்தி நிரம்பி இருப்பதால், இதுபோன்ற கோவில்களில் வழிபாட்டால் நிறைவான பலன் கிடைக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தலவிருட்சத்தை தினமும் மூன்று முறை வலம் வந்து கடவுளை வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    விருட்சம் என்பது மரத்தை குறிக்கும். மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தலவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வமரம் போன்றவை, கோவில்களை தவிர மற்ற இடங்களில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

    ×