search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple kumbhabhishekam"

    • கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ரங்கராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீ குட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அந்த புனித நீரை பக்தர்களுக்கு மீது தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ குட்டியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மங்கலம் மேலவாத்தியங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேகத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுக்கா புதுக்கோட்டை அடுத்த செல்லாக்குட்டை ஏரியில் அமைந்துள்ள செல்வகணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, முதல் கால பூஜை, தீபாராதனை இரண்டாம் கால பூஜை, சங்கல்பம், கலச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்வாக கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

    நிகழ்ச்சியில் ஏ. நல்லதம்பி எம்எல்ஏ, நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி. கழகஅரசு, எம்.ஆர்.ராஜேந்திரன், பி. ஆர். சின்னபையன், சர்வோதய சங்க பொருளாளர் வெங்கடேசன், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்‌. கோவிந்தராஜ், பிரபாகரன், பிரசித் குமார், அருண்குமார் அபிஷேக் பிரசாந்த், , தருவேஷ், கண்ணதாசன், ஜேபி, வேலு, உட்பட நிர்வாக குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வந்தவாசி வெங்கடாபுரத்தில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது.

    இதையொட்டி சனிக்கிழமை கோயிலை ஒட்டி யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், கணபதி பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    மகா கணபதி ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலசப் புறப்பாடு நடந்தது.

    காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கோவில்களின் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    பின்னர் மூலவர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டியில் சிவனடிஐயன் சுவாமி, பேச்சியம்மன், விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட பரிவாரதெய்வங்களுக்கு கட்டப்பட்டுள்ள கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டியில் சிவனடிஐயன் சுவாமி, பேச்சியம்மன், விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட பரிவாரதெய்வங்களுக்கு கட்டப்பட்டுள்ள கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல்நாள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் பூஜைகள் நடந்தது.

    இதில் அழகர்மலை, நூபுரகங்கை, காவேரி, கங்கை, வைகை, காசி, ராமேஸ்வரம், மஞ்சமலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் வைக்கப்பட்டு பட்டா சாரியார்களின் வேத மந்திரங்களுடன் பூஜைகள் நடந்தது.

    மறுநாள் யாகசாலை பூஜைக்கு பின்னர் மேள தாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர உச்சியில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

    பக்தர்களுக்கு புனிததீர்த் தமும் பூஜைமலர்களும் வழங்கப்பட்டன. மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. விழாைவில் சுற்று வட்டாரம் வெளிமாவட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சூரங்குடி கூட்டம் சிவனடி கோத்திரம் பங்காளிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.

    ×