search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple kumbhabhishekam"

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னவரிகம் ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் தேவஸ்தான மஹா ஸம்ப்ரோக்ஷணா கும்பாபிஷேகம் விழா மணிக்கு நடைபெற்றது.

    ஆம்பூரை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை இளைஞர்களும் பொது மக்களும் செய்திருந்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • கிருஷ்ணர் வேடம் அணிந்த பக்தர் பஜனை பாடல்கள் பாடினார்

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் கிராமத்தில் ராதா ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பட்டாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கோவிலை வளம் வந்து கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டி கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.விழாவின்போது கிருஷ்ணர் வேடம் அணிந்த பக்தர் பஜனை பாடல்கள் பாடினார். ஒ.ஜோதி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனிவாசன், ஞானவேலு மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் கு.வெங்கடேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினரான ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பரசுராமன், முன்னாள் தலைவர்கள் ஆதி கேசவன், இந்திரகுமார் மற்றும் ஆதிமூலம் ஆகியோர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு யாகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வன்னியந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நல்லாத்தூர் அம்மன் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது.

    பின்னர் யாக வளர்த்த இடத்தில் இருந்து கலசங்கள் புறப்பாடு மேள தாள வாத்தியங்களுடன் வானவேடிக்கையுடன் பம்பை உடுக்கை அடித்து சாமியாடி சிவாச்சா ரியார்கள் கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்து கோவில் கோபுர கலசத்திற்கு உள்ள சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாரதனை காட்டி கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    பக்தர்கள் தரிசனம்

    வன்னியந் தாங்கல், கிளியாத்தூர் நெடும்பிறை, பெரிய கோயில் வடங்கம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் மகா கும்பாபிஷேக விழவில் கலந்து கொண்டணர்.

    • கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் பாரதி ரோட்டில் அமைந்துள்ள குருமன்ஸ் குல அலிய குலத்தாரின் குலதெய்வமான .வீரபத்திர சுவாமி, கோடியள்ளி ராயன்சுவாமி, தோரளப்ப சுவாமி, கரிபீரப்ப சுவாமி, அனிபீரப்ப சுவாமி, தாய் லிங்கம்மாள்சுவாமி மற்றும் நந்திகேஸ்வரருக்கு ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபி ஷேகம் நிகழ்ச்சியை ஓட்டி சின்னகுளம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து கங்கை பூஜையுடன்.

    தோரளப்ப சுவாமி கரகத்துடன் திருவீதி உலா வந்து கோயிலை அடைந்தது பின்னர் அங்குமங்கள இசை, வேதபாராயணம், அனுக்ஞை, அங்குரார்பணம், புண்ணிய ஹவசனம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேஷம், முதல் கால பூஜைகள், நடைபெற்றது.

    கும்பாபிஷேகம்

    தொடர்ந்து கணபதி ஹோமம், குருமன்ஸ் இன மக்களின்சேவை ஆட்டமும் பக்தர்கள் மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரண்டாம் கால யாக பூஜைகள் முன்னிட்டு தம்பதியர் சங்கல்பம், விஷேச 108 திரவிய ஹோமம்,

    முக்கிய நிகழ்வாக புனித நீர் கலசங்களில் பூஜைகள் செய்யப்பட்டு. கலச புறப்பாடு கோயிலை வலம் வந்து நந்தீஸ்வரரருக்கும் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், நடைபெற்றது.

    தொடர்ந்து விநாயகர் தோரளப்ப சுவாமி கரிபீரப்ப சுவாமி, தாய்லிங்கம்மா சுவாமிக்கு நவகிரஹ மூர்த்தி சுவாமி மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் அன்ன தானம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரளியப்ப சுவாமி மற்றும் வீரபத்திர சுவாமி ஆலயம் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், அருகே உள்ள பரியம்பாடி, கிராமத்தில் விநாயகர், கெங்கையம்மன், பொன்னியம்மன், நவகிரக சன்னதி, ஆகியகோவில்கள் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 3 யாக குண்டங்கள் அமைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து.

    பிரபாகரன்பா ரதியார், சிவ முத்துபாரதியார், சிவலிங்கா ஓதுவார், ஆகிய குழுவினர் 3 காலை யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு மூலிகைகள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளம் முழங்க புனித நீர் கலசத்தை, கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நாட்டாண்மைதாரர்கள், சென்னை வாழ் மக்கள், விழா குழுவினர், மற்றும் இளைஞர்கள், ஆகியோர் செய்து இருந்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வேலூர்:

    வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம், ஏரியூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று மாலை வாஸ்து சாந்தி பூஜை கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நவகிரம்பமும் நடந்தது. காலை 9 மணிக்கு திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன.

    இதையடுத்து வேத பண்டிதர்கள் வேதங்கள் முழங்க பூஜையில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
    • ஏரளாமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அருகே உள்ள தச்சம்பட்டு, கிராமத்தில் ஜடா முனீஸ்வரன், முத்தாயி, அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து. 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து 3 காலயாக பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளம் முழங்க புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து ஜடாமுனீஸ்வரன், முத்தாயி, அம்மன் சிலைகள் மீது ஊற்றினார்கள்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர், செய்து இருந்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பத்தூரில் வருகிற 2-ந் தேதி நடக்கிறது
    • அமைச்சர்கள், கலெக்டர் பங்கேற்கின்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் நகரத்து வைசியர்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட சுயம்பு மாய வினாயகர் சுவாமி கோயில் இராஜகோபரம், விமானம், ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வருகிற 2-ம் தேதி மங்கல இசை உடன் தொடங்கி விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, பூர்ணங்குதியுடன் நடைபெறுகிறது.

    தொடர்ந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, ராஜ கோபுரங்களுக்கு தானியம் கலசம் வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்னிசை கலைஞர் குமாரின் பக்தியும் சக்தியும் என்ற பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரிநடைபெறுகிறது.

    தொடர்ந்து ராஜா கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது நிகழ்ச்சியில் பொதுப் பணி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எ வ. வேலு, கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். காந்தி கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரத்து வைசியர்கள் சங்கம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது
    • பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோயில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வரும் 27 தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற உள்ளன.

    இதனை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி திங்கட்கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை தொடர்ந்து மங்கல இசை கிராம சாந்தி பிரசவ பலி சாந்தி ஓமம் பூர்ணாவதி பல்வேறு நிகழ்ச்சிகளும் முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 850 ஆண்டு பழமை வாய்ந்தது
    • 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் அமைந்துள்ள 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கடந்த 9-ந்தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி பிரவேச பலி நடைபெற்றது.

    கணபதி பூஜை, தனபூஜை நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணஹூதி நடைபெற்றது தொடர்ந்து முதல் கால பூஜை, யாகவேள்வி, தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, மூன்றாம் நான்காம், கால பூஜை, தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வாகயாக சாலையில் குடங்களில் புனித நீர் பூஜை செய்யப்பட்டு நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் 61 அடி உயரம் உள்ள ராஜகோபரத்தின் மீதும் அங்கன் அங்கநாதீஸ்வர் மூலஸ்தானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக ஹர ஹர சிவாய நமக என கோஷமிட்டனர்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சியில் க.தேவராஜ் எம்.எல்.ஏ, திருவண்ணாமலை அருனை மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் கம்பன், மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி, ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவராஜன், சின்னப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் ஒன்றிய குழு உறுப்பினர் இளவரசி ரகு உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அங்கநாதீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வஜ்ரவேல் இந்து சமய அறநிலைத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • அமரகுந்தியில் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியை ஆட்சி புரிந்து வந்த கேட்டிமன்னன் இங்கு பல கோவில்களை கட்டி கோட்டைகள் அமைத்து ஆட்சி செய்து வந்துள்ளார்.
    • இத்தகைய சிறப்புடைய கோவில் தற்போது இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள அமராவதி பட்டணம் என்று அழைக்க கூடிய அமரகுந்தியில் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியை ஆட்சி புரிந்து வந்த கேட்டிமன்னன் இங்கு பல கோவில்களை கட்டி கோட்டைகள் அமைத்து ஆட்சி செய்து வந்துள்ளார்.கெட்டி மன்னன் காலையில் சொக்கநாதரையும், மதியம் கைலாசநாதரையும், மாலையில் வைகுந்த பெருமாளையும், அர்த்தஜாம பூஜையில் திருச்செங்கொடு அர்த்தனாரி ஈசனையும் வழிபட்டு வந்ததாக வரலாறு உண்டு,

    இத்தகைய சிறப்புடைய கோவில் தற்போது இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிசேகம் நடை பெற்றது. இதையொட்டி கடந்த 11-ந்தேதி புனித தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது, அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடத்த பட்டு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபி ஷேகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலைய துறை அதிகாரிகள் தக்கார் மற்றும் செயல் அலுவலர் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள், அமரகுந்தியை சேர்ந்த சிவனடியார் திருகூட்டம் ஆகியோர் செய்தனர்.அதனை தொடர்ந்து காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது.

    • 108 கலசம் வைத்து பல்வேறு ஹோமங்கள் நடந்தது
    • துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்பு

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த மடம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரகன் நாயகி சமேத தடகாபுரீஸ்வரர் கோவில் புதிதாக புதுக்கப்பட்டு பஞ்சவர்ணம் பூசி இதன் கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. மேளதாளங்கள் மற்றும் கைலாய வாத்தியங்கள் முழங்க புனித நீரை கலசத்தை கோவிலை சுற்றி வந்து ராஜகோபுரம் கொடிமரம் மற்றும் விமானம் மீது பின்னர் புனித நீரை தெளித்தனர். ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் துணை சபாநாயகர் கீழ்பென்னாத்தூர் பிச்சாண்டி எம்.எல்.ஏ. , அம்பேத்குமார் எம்எல்ஏ, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன், பெரணமலை ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா வேலன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா புஷ்பராணி ராமதாஸ், மடம் ஊராட்சி மன்ற தலைவர் தரணி சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மேகன சுந்தரம், இந்து சமயஅறநிலைத்துறை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, மற்றும் முன்னதாக நேற்று முன்தினம் நடந்த 3 ம் காலயாக பூஜையில் முன்னாள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், ஆரணிதொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    கோவில் சார்பில் விழா குழு மேளதாளத்துடன் பூரண மரியாதை கும்பம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாக்யராஜ், விழா குழுவினர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள், ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×