search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடாக புரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    தடாக புரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    • 108 கலசம் வைத்து பல்வேறு ஹோமங்கள் நடந்தது
    • துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்பு

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த மடம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரகன் நாயகி சமேத தடகாபுரீஸ்வரர் கோவில் புதிதாக புதுக்கப்பட்டு பஞ்சவர்ணம் பூசி இதன் கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. மேளதாளங்கள் மற்றும் கைலாய வாத்தியங்கள் முழங்க புனித நீரை கலசத்தை கோவிலை சுற்றி வந்து ராஜகோபுரம் கொடிமரம் மற்றும் விமானம் மீது பின்னர் புனித நீரை தெளித்தனர். ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் துணை சபாநாயகர் கீழ்பென்னாத்தூர் பிச்சாண்டி எம்.எல்.ஏ. , அம்பேத்குமார் எம்எல்ஏ, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன், பெரணமலை ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா வேலன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா புஷ்பராணி ராமதாஸ், மடம் ஊராட்சி மன்ற தலைவர் தரணி சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மேகன சுந்தரம், இந்து சமயஅறநிலைத்துறை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, மற்றும் முன்னதாக நேற்று முன்தினம் நடந்த 3 ம் காலயாக பூஜையில் முன்னாள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், ஆரணிதொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    கோவில் சார்பில் விழா குழு மேளதாளத்துடன் பூரண மரியாதை கும்பம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாக்யராஜ், விழா குழுவினர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள், ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×