search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student protest"

    வங்கதேசத்தில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் இரண்டு சிறுவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.#BangladeshStudentProtests #BangladeshTransport
    டாக்கா:

    வங்கதேசத்தில் போக்குவரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அபாயகரமான சாலைகளால் தொடர்ந்து விபத்து நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் மற்றும் சிறுமி மீது மோதியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆங்காங்கே சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக மாணவர்கள் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாருடன் மோதலும் நடந்தது. இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. 

    இன்று ஐந்தாவது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டாக்காவில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

    அரசு போக்குவரத்து கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்றும், போராட்டக்காரர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் உள்துறை மந்திரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துக்களில் 4200க்கும் மேற்பட்ட பாதசாரிகள் உயிரிழந்ததாகவும், இது முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம் என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. #BangladeshStudentProtests #BangladeshTransport #BangladeshRoadSafety
    தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி உள்ளது. இன்று காலை வழக்கம் போல் மாணவ - மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர்.

    இதைத் தொடர்ந்து வகுப்புகள் தொடங்கிய பின்பு அவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு முன்பு அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் மாவட்ட தலைவர் பூவரசன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் மாணவ-மாணவிகள் தமிழக மாணவர்களை கொலை செய்யும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மக்களை கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வர கூடாது. விவசாய நிலங்களை அழித்து புதிதாக கொண்டுவரும் சேலம் - சென்னைக்கு 8 வழிச்சாலை பணிகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மேலும் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அசம் பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    கோவில்பட்டி அரசு பள்ளியில் 3 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டி:

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டு அத்தகைய ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவில்பட்டி அரசு பள்ளியில் 3 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

    இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் 3 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து வெளியில் வந்தார்கள்.

    பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்த அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×