search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
    X

    தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

    தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி உள்ளது. இன்று காலை வழக்கம் போல் மாணவ - மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர்.

    இதைத் தொடர்ந்து வகுப்புகள் தொடங்கிய பின்பு அவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு முன்பு அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் மாவட்ட தலைவர் பூவரசன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் மாணவ-மாணவிகள் தமிழக மாணவர்களை கொலை செய்யும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மக்களை கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வர கூடாது. விவசாய நிலங்களை அழித்து புதிதாக கொண்டுவரும் சேலம் - சென்னைக்கு 8 வழிச்சாலை பணிகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மேலும் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அசம் பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    Next Story
    ×