search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports Development Authority"

    • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை இணைந்து மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்துகிறது.
    • வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1000, 2-ம் பரிசு ரூ. 750, 3-ம் பரிசு ரூ. 500 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

    தென்காசி:

    பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை இணைந்து மகளிர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்துகிறது. வருகிற 18-ந் தேதி காலை 6.30 மணிக்கு தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 5 கி.மீ தூரம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. போட்டியில் அனைத்து வயது பெண்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1000, 2-ம் பரிசு ரூ. 750, 3-ம் பரிசு ரூ. 500 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

    போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் குளிர்பானம், குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும்.

    இத்தகவலை தகவலை மாவட்ட கலெக்டர் துரை ரவி ச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ×