search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvAUS"

    • ஸ்டீவ் ஸ்மித் உள்பட 7 ஆஸ்திரேலியா வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
    • முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

    3-வது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்ததாக டெஸ்ட் தொடர் இருப்பதால் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வில் இருக்க மருத்துவ குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் உள்பட 7 ஆஸ்திரேலியா வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கையின் சனகா, சமீகா கருணரத்னே ஜோடி 7வது விக்கெட்டுக்கு 60 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
    • இலங்கை வீரர் சனகா அதிரடியாக ஆடி 25 பந்தில் 54 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    பல்லேகலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இரு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 39 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் தீக்‌ஷனா 2 விக்கெட், ஹசரங்கா, ஜெயவிக்ரமா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் டாசன் சனகா மட்டும் ஓரளவு போராடினார்.

    நிசங்கா 27 ரன்னும், அசலங்கா 26 ரன்னும் எடுத்தனர். சனகா கடைசிவரை போராடி அணியை வெற்றிபெறச் செய்தார்

    இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சனகா 54 ரன்னுடனும், கருணரத்னே 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.

    • இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கையின் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கொழும்பு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அசலங்கா 39 ரன்னும், குசால் மெண்டிஸ் 36 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட், ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 24 ரன்னும், டேவிட் வார்னர் 21 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடி 26 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    • இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    • ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    கொழும்பு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா 38 ரன்னும், பதும் நிசங்கா 36 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். அந்த அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 70 ரன்னும், ஆரோன் பின்ச் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ×