ஹேசில்வுட் அபார பந்துவீச்சு - முதல் டி20 போட்டியில் இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஹேசில்வுட்டை பாராட்டும் சக வீரர்கள்
ஹேசில்வுட்டை பாராட்டும் சக வீரர்கள்
Published on

கொழும்பு:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா 38 ரன்னும், பதும் நிசங்கா 36 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். அந்த அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 70 ரன்னும், ஆரோன் பின்ச் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com