search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivandhi adithanarm birthday"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.
    • தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் மலர் மாலை சூட்டி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ×