search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siva mla"

    • ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
    • கருணாநிதி உருவசிலையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

    இதன்படி புதுவை மாநில தி.மு.க. இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் கிளைக் கழகங்கள் தோறும் கட்சிக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து பல்வேறு பொதுக் கூட்டங்கள் நடத்திடவும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளன. கருணாநிதி நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், (செவ்வாய்கிழமை) திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது.

    பீகார் மாநில முதல்- மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தையும், பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தையும் திறந்து வைக்கிறார்கள். கருணாநிதி உருவசிலையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளால் கருணாநிதிக்கு திருவாரூரில் புகழ்மாலை சூட்டப்படுகிறது.

    தி.மு.க.வின் வலிமையைக் காட்டும் வகையிலே திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நமது மாநில கட்சியின் வலிமையை காட்டிட அன்போடு அழைக்கிறேன்.

     காலை 6 மணியளவில் புதுவை மாநில கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தலைமைக் கட்சி அலுவலகத்தில் ஒன்றிணைந்து புறப்பட்டு காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளில் பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணிவகுப்பாய் திரண்டிடுவோம்

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்.
    • பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர், கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச பள்ளிச் சீருடை மற்றும் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கினார். ஆசிரியர் அப்துல் மாலிக் வரவேற்றார. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை மற்றும் சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி நிறைவில் ஆசிரியர் பூங்குன்றன் நன்றி கூறினார்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்
    • தி.மு.க. பிரமுகர்கள் பாலா சக்திவேல், சிவப்பிரகாசம், நடராஜன், அச்சுதன், கிருபா, குருநாதன், குமார் மற்றும் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, வில்லியனூர் தொகுதி, கொம்பாக்கம் வார்டு, துர்கா நகர், தி.மு.க. கிளை சார்பில், கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 20-–க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா கொம்பாக்கம் துர்கா நகரில் நடந்தது. துர்கா நகர் தி.மு.க. பிரமுகர் ரமேஷ் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    விழாவில், தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் கந்தசாமி, மாநில சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் தேசிகன், கிளைச் செயலாளர் சுரேஷ் அவைத்தலைவர் தேவநாதன், தி.மு.க. பிரமுகர்கள் பாலா சக்திவேல், சிவப்பிரகாசம், நடராஜன், அச்சுதன், கிருபா, குருநாதன், குமார் மற்றும் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு
    • ஒரு இளநிலைப் பொறியாளர் 3 டிவிஷன்களை சேர்த்து பார்க்கும் நிலையை மாற்றி ஒரு தொகுதிக்கு ஒரு இளநிலைப் பொறியாளர் என்று நியமிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை எதிர்கட்சித் தலைவர் சிவா வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறையில் போதிய ஆட்கள் இல்லாமல் மின்துறை செயலிழந்து முடங்கியுள்ளது.

    புதுவையின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. திடீர் என ஏற்படும் மின்சார நிறுத்தத்தை சரிசெய்தல், மின்மாற்றியில் பியூஸ் மாற்றுதல், மின்சார அளவீடு செய்தல் போன்ற முக்கியமான பணிகளுக்குக்கூட ஆட்கள் இல்லாமல் ஒப்பந்த பணியாளர்களை நம்பியே மின்துறை இருக்கிறது.

    புதுவை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நிலையை கையிள் எடுத்திருப்பதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். ஆனாலும் கூட மின்துறையில் ஏற்பட்டுள்ள ஆட்கள் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    மின்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்கள் பணிஓய்வு பெற்ற நிலையிலும், கடந்த 10 ஆண்டுகளாக புதிய ஆட்கள் ஏதும் எடுக்காத நிலையிலும் பணி நியமனம் இன்று கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு இளநிலைப் பொறியாளர் 3 டிவிஷன்களை சேர்த்து பார்க்கும் நிலையை மாற்றி ஒரு தொகுதிக்கு ஒரு இளநிலைப் பொறியாளர் என்று நியமிக்க வேண்டும்.

    மின்துறையில் உள்ள குறைபாடுகளை களைந்து, தேவையான ஆட்களை நியமனம் செய்து மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு
    • மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

     புதுச்சேரி:

    ஒடிசாவில் கோர ரெயில் விபத்தை தொடர்ந்து மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் புதுவையில் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தி.மு.க.வினர் அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. செயலாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சேதுசெல்வம் தி.மு.க. அவை தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பா ளர்கள் அனிபால் கென்னடி

    எம்.எல்.ஏ, தைரியநாதன், ஏ.கே.கல்யாணி கிருஷ்ணன், பொருளாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், அருட்செல்வி,

    பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கோபால்,கார்த்திகேயன், வேலவன், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்பரிதி, பழனி, பிரபாகரன், மாறன் என்ற கனகராஜ், கோபால கிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ் மற்றும் அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து, மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
    • சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக செல்வது ரத்து செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஒடிசாவில் ரெயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். இதேபோல புதுவையிலும் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா கோர ரெயில் விபத்து காரணமாக தலைவர் ஆணையின் படி புதுவை மாநில தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த கலைஞருடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக செல்வது ரத்து செய்யப்படுகிறது.

    கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருக்கின்ற தலைவருடைய திருவுருவச் சிலைக்கு நேரடியாக வந்து மரியாதை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  சென்னையில் நடைபெறும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கழக நிர்வாகிகள் சென்னை செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.
    • ரூ.30 லட்சத்து 97 ஆயிரம் செலவிலான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சுல்தான்பேட்டை பஞ்சாயத்தில் கொம்பாக்கம் வாய்க்கால் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் செலவில் தூர்வாருதல், அப்துல் கலாம் நகரில் ரூ.14 லட்சத்து 46 ஆயிரம் செலவில் செம்மன் சாலை அமைத்தல், ஜாகீர் உசேன் நகரில் ரூ.9 லட்சத்து 73 ஆயிரம் செலவில் செம்மன் சாலை அமைத்தல், சுல்தான்பேட்டை பகுதியில் ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் செலவில் உறிஞ்சுக் குழிகள் அமைத்தல் என மொத்தம் ரூ.30 லட்சத்து 97 ஆயிரம் செலவிலான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    எதிர்க்கட்சித் தலைவரான இரா.சிவா செம்மன் சாலை, வாய்க்கால் தூர்வாரும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைஷாக் பாகி, உதவிப் பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சித்தார்தன், பணி ஆய்வாளர் விஜய், அருணாசலம், கிராம திட்ட ஊழியர்கள் முனுசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஜலால் ஹனீப், ஹாஜி முகமது, சிராஜிதீன், முகம்மது சுல்தான், கமாலுதீன், அன்சாரி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜாமத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • எதிர்கட்சி தலைவர் சிவாவுக்கு விவசாய தொழிலாளர் சங்கம் பாராட்டு
    • விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக மிகக் குறைந்த நிதி ஒதுக்கப்பட்டது.

    இதனால் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10 நாள் கூட வேலை கிடைக்காத நிலை இருந்தது. இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து சிவா கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசின் கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

    அப்போது புதுவை மாநிலத்தில் 75 ஆயிரம் வேலை அட்டை பெற்றவர்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கினால் தான் 100 நாள் வேலை முழுமையாக தரமுடியும். ஆனால் இந்த அரசு வெறும் ரூ. 12 கோடி ஒதுக்கி 5 முதல் 10 நாட்கள் வேலைதான் கிடைக்கிறது என்றும் நடப்பு நிதியாண்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கவில்லை என்றால் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று பேசினார்.

    இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்ற அரசு தற்போது ரூ.120 கோடிநிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    100 நாள் வேலை திட்ட நிதியை உயர்த்தியதற்கு தொடர்ந்து குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவாவுக்கு புதுவை விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சுமதி தலைமையில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, மஞ்சுளா, மங்கையர்கரசி, கயல்விழி, அம்சவள்ளி ஆகியோர் பேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

    • கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகளை இந்த ஆண்டு தொடங்குவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் அனி பால்கென்னடி எம்.எல்.ஏ., தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

     கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை புதுவையில் வருகிற 3-ந் தேதி சிறப்பாக கொண்டாடுவது வட சென்னையில் அன்று நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்பது.

    புதுவையிலும் கருணாநிதி நூற்றாண்டுவிழாவை ஓராண்டு கொண்டாடுவது. கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகளை இந்த ஆண்டு தொடங்குவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் உற்சவம் ஜுன் 1-ந் தேதி தேதி நடக்கிறது இதையொட்டி, கூடப்பாக்கம் நிமிலீஸ்வரர் உழவாரப்பணி திருக்கூட்டம் சார்பில் திருக்காமீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. உழவாரப்பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன், தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி தி.மு.க சார்பில் 4 மாட வீதி அண்ணாசிலை அருகில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், சோமசுந்தரம், தொகுதி அவைத் தலைவர் ஜலால் ஹைனீன், துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, ரமணன், சபரிநாதன், ராஜேந்திரன், செல்வநாதன், அங்காளன்,

    கிளைச் செயலாளர்கள் அருள்மணி, மிலிட்டரி முருகன், சுரேஷ், அன்புநிதி, வீரக்கண்ணு, திலகர், சுப்ரமணியன், கதிரவன், வெங்கடேசன், அக்பர், கமால்பாஷா, ரகுராமன், தஷ்ணா, ராமதாஸ், ரமேஷ், தேசிங்கு, ரபீக், பாஸ்கர், சிலம்பு, மணவாளன், செல்வநாயகம், லட்சுமணன், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மோர் பந்தலை எதிர்கட்சி தலைவர் சிவா திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.

    • சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மணவௌி கிராமத்தில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மத்திய அரசின் தூய்மை பாரத் திட்டத்தில் பொது உறிஞ்சுக் குழி (அமைக்க ரூ. 4 லட்சத்து 15 ஆயிரம் மற்றும் வில்லியனூர் எம்.என்.ஆர். நகர், மாதா கோவில் விரிவாக்கம் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் செம்மண் சாலை அமைக்க ரூ. 3 லட்சத்து 61 ஆயிரம் என மொத்தம் ரூ. 7 லட்சத்து 76 ஆயிரம் நிதி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

    எதிர்க்கட்சித் தலைவருமான. சிவா பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைஷாக் பாகி, உதவிப் பொறியாளர்கள் சந்திரசேகரன், ராமன், இளநிலைப் பொறியாளர்கள் ராமநாதன், செங்கதிர், பணி ஆய்வாளர் ரங்கராஜ், கிராம திட்ட ஊழியர்கள் கலைச்செல்வி, திரிபுரசுந்தரி மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். செம்மன் சாலை அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

    ×