என் மலர்
புதுச்சேரி

எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ.வுக்கு விவசாய தொழிலாளர் சங்கம் பாராட்டு தெரிவித்த காட்சி.
100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு
- எதிர்கட்சி தலைவர் சிவாவுக்கு விவசாய தொழிலாளர் சங்கம் பாராட்டு
- விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக மிகக் குறைந்த நிதி ஒதுக்கப்பட்டது.
இதனால் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10 நாள் கூட வேலை கிடைக்காத நிலை இருந்தது. இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து சிவா கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசின் கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.
அப்போது புதுவை மாநிலத்தில் 75 ஆயிரம் வேலை அட்டை பெற்றவர்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கினால் தான் 100 நாள் வேலை முழுமையாக தரமுடியும். ஆனால் இந்த அரசு வெறும் ரூ. 12 கோடி ஒதுக்கி 5 முதல் 10 நாட்கள் வேலைதான் கிடைக்கிறது என்றும் நடப்பு நிதியாண்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கவில்லை என்றால் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று பேசினார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்ற அரசு தற்போது ரூ.120 கோடிநிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்ட நிதியை உயர்த்தியதற்கு தொடர்ந்து குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவாவுக்கு புதுவை விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சுமதி தலைமையில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, மஞ்சுளா, மங்கையர்கரசி, கயல்விழி, அம்சவள்ளி ஆகியோர் பேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.






