என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தி.மு.க.வினர் திருவாரூர் திரள சிவா எம்.எல்.ஏ. அழைப்பு
    X

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்கும் வைத்தியலிங்கம் எம்.பி.க்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.  

    புதுவை தி.மு.க.வினர் திருவாரூர் திரள சிவா எம்.எல்.ஏ. அழைப்பு

    • ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
    • கருணாநிதி உருவசிலையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

    இதன்படி புதுவை மாநில தி.மு.க. இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் கிளைக் கழகங்கள் தோறும் கட்சிக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து பல்வேறு பொதுக் கூட்டங்கள் நடத்திடவும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளன. கருணாநிதி நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், (செவ்வாய்கிழமை) திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது.

    பீகார் மாநில முதல்- மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தையும், பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தையும் திறந்து வைக்கிறார்கள். கருணாநிதி உருவசிலையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளால் கருணாநிதிக்கு திருவாரூரில் புகழ்மாலை சூட்டப்படுகிறது.

    தி.மு.க.வின் வலிமையைக் காட்டும் வகையிலே திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நமது மாநில கட்சியின் வலிமையை காட்டிட அன்போடு அழைக்கிறேன்.

    காலை 6 மணியளவில் புதுவை மாநில கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தலைமைக் கட்சி அலுவலகத்தில் ஒன்றிணைந்து புறப்பட்டு காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளில் பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணிவகுப்பாய் திரண்டிடுவோம்

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×