search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sithi Vinaayaga Viradham"

    • இந்நாளில் உடல் உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.
    • நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக்கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும்.

    சித்தி விநாயக விரதம்!

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்து செய்யப்படும் விரதம் இது.

    தேவகுரு பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது.

    இந்நாளில் உடல் உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.

    இன்று பிள்ளையாருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து, மோதகமும் சர்க்கரைப் பொங்கலும் நைவேத்தியம் செய்து கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

    இதனால், காரியத் தடங்கல்களும் வறுமையும் நீங்கும். புத்திர சம்பத்து உண்டாகும்.

    கடன் பிரச்னைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

    தூர்வாஷ்டமி விரதம்!

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது.

    இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக்கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும்.

    இதனால் குடும்பம் செழிக்கும்.

    ×