search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரட்டாசி"

    • புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.
    • விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

    2. ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

    3. புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.

    4. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

    5. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    6 . புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    7.விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    8. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

    9. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.

    10. காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

    11. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.

    12.புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

    13. புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.

    14. ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் புரட்டாசி மாதம் கருடவழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும்.

    15. சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.

    16. புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.

    17.பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    18. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

    19. புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக்கூடாத நாளாக இருந்து விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.

    20. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம்.முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவார்கள்.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

    • பூஜை அறையில் வெங்கடாஜல பதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.
    • துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித நாளாகக் கருதப்படுகிறது.

    அன்று வழிபாடு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

    அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் நாமம் சின்னத்தை அணிய வேண்டும்.

    சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம்.

    பூஜை அறையில் வெங்கடாஜல பதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.

    விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.

    துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.

    பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.

    வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

    இதே போல் மாலை நேரத்திலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும். மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்க டேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது.

    வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.

    பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.

    சிலர் பாயாசமும் படைப்பர்.

    வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது.

    பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு.

    எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர்.

    வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.

    இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

    • மானிட அவதாரம் எடுத்து பூமிக்கு ராமன் வந்தபோது, சனி பகவான் அவரைக் காட்டுக்கு அனுப்பினார்.
    • மனிதன் தன் பாவத்தைக் களைந்து, சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து தப்பிக்க உதவும் நாளே புரட்டாசி சனி.

    சனி பகவானால் துன்பப்படாத மனிதர்களே இல்லை கடவுள்களையே இவர் சோதிக்கிறார் என புராணங்கள் சொல்கின்றன.

    கடவுளே, மனித அவதாரம் எடுத்து வந்தாலும் இவர் விடுவதில்லை.

    மானிட அவதாரம் எடுத்து பூமிக்கு ராமன் வந்தபோது, சனி பகவான் அவரைக் காட்டுக்கு அனுப்பினார்.

    மனைவியைப் பிரியச் செய்தார். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சொற்களை பேசுவார்கள்.

    பாண்டவர்கள் நாடு, மனைவியை இழந்தனர். அரிச்சந்திரன் வறுமையால் மனைவியை விற்றான். மனைவியைப் பிரிந்து காட்டில் திரிந்தான் நளன்.

    ராஜாதி ராஜாக்களான இவர்களே இப்படி என்றால், சாதாரண மானிட ஜென்மங்களான நம்மை சனிபகவான் விட்டு வைப்பாரா என்ன? மனிதர்களில், இவர் பாவம் செய்யாதவர்களை மட்டும் விடுவார்.

    மற்றவர்களை பாடாய்படுத்தி விடுவார். மனிதனாகப் பிறந்தவன் தன் பாவத்தைக் களைந்து, சனீஸ்வர பகவானின்  பிடியிலிருந்து தப்பிக்க உதவும் நாளே புரட்டாசி சனி.

    அன்று பகலில் விரதமிருந்து மாலையில், விஷ்ணு கோவில் களுக்கு செல்ல வேண்டும். சில விஷ்ணு கோவில்களில், சனீஸ்வரர் சன்னதி இருக்கும். சிவாலயங்களிலும் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உண்டு.

    இந்த சன்னதிகளில் கருப்புத் துணியில் எள்ளை நல்லெண்ணைக்குள் மூழ்கடித்து தீபம் ஏற்ற வேண்டும்.

    சில விஷ்ணு கோவில்களில் பெரிய குழி தோண்டி அதற்குள் எள்ளைப் போட்டு எண்ணை ஊற்றி ஆழி போல எரிப்பர்.

    இதன் பொருள் என்ன தெரியுமா?

    கருப்புத் துணி, மாய அலையில் சிக்கிய இந்த உலகம்.

    இந்த இருண்ட உலகில் இன்பங்களைத் தேடி அலையும் ஆத்மாக்கள், அவற்றை அடைவதற்காக பாவம் புரிகின்றனர்.

    அந்த பாவங்களே எள்.

    உதிரியாக செய்த பாவங்களை மொத்தமாக கருப்புத் துணியில் கட்டி, ஆழியில் சேர்த்து எரித்து விடுகிறோம். மொத்தத்தில் பாவங்களை அடியோடு ஒழிப்பதற்குரிய நாள் புரட்டாசி சனி.

    • மனநலம் குன்றிய குழந்தைகள் விரைவில் குணம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • இந்த தலத்து திருமாலின் திருநாமம் & ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.

    காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் மதுராந்தகத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருமலை வையாவூர்.

    சுமார் 450 படிகளைக் கடந்து சென்றால்... மலையில் கோவில் கொண்டிருக்கும் மலையப்பனை, ஸ்ரீபிரசன்ன வேங்கடேசனைக் கண்ணாரத் தரிசிக்கலாம்.

    இந்த தலத்து திருமாலின் திருநாமம் & ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.

    ஆதி வராக சேஷத்திரம் என திருப்பதி தலத்தைப் போலவே இந்த தலத்தையும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    முதலில் ஸ்ரீஆதி வராகரின் அற்புத தரிசனம். இவரை தரிசித்து விட்டுத்தான் மூலவரை தரிசிக்க வேண்டும் என்பார்கள்.

    மூலவராக... ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள், நின்ற திருக்கோலம், தோளில் சாளக்கிராம மாலையும் அஷ்டலட்சுமி ஆரமும் ஸ்ரீலட்சுமி ஆரமும் என தகதகக்கிற திருமாலின் திருமேனியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    குறிப்பாக, தசாவதார திருக்கோலங்கள் கொண்ட ஆபரணத்தை மாலையாகவும் ஒட்டியாணமாகவும் அணிந்தபடி காட்சி தரும் அழகே அழகு! இன்னொரு விஷயம்... கையில் செங்கோலுடன் தரிசனம் தருகிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.

    விஜயநகரத்தை ஆட்சி செய்த ராஜா தோடர்மால், திருப்பதி திருத்தலத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஒருநாள் மன்னனுக்குக் காட்சி தந்த திருமால், 'பர்வதத்தின் உச்சியில் இங்கே கோவில் அமைந்திருப்பது போல, பர்வதத்தின் மற்றொரு பாகத்திலும் எனக்கு கோவில் எழுப்புவாயாக! அங்கே இருந்தபடியும் பூலோகத்தை காக்கத் திருவுளம் கொண்டுள்ளேன்' என அருளினார்.

    இதில் நெக்குருகிப் போன மன்னன், வையாவூரில் உள்ள மலையில் கோவில் கட்டினான். அதுவே திருமலை வையாவூர் என்றானதாக தெரிவிக்கிறது தல வரலாறு.

    ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளை வணங்கினால், சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இங்கே... ஸ்ரீசுதர்சனர் தனி விமானத்துடன் கோவில் கொண்டிருக்கிறார்.

    இவரை வணங்கி தொழுதால், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்!

    சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை மற்றும் மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசிப்பது சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும். புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கே நடைபெறும் திருப்பாவாடை சேர்த்தி உற்சவம் வெகு பிரசித்தம். இதில் கலந்து கொண்டு திருமாலைத் தரிசித்தால், பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

    குறிப்பாக, மனநலம் குன்றிய குழந்தைகள் விரைவில் குணம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இங்கே உள்ள தீப ஸ்தம்பத்தில், புரட்டாசி பிரம்மோற்சவம் தொடங்கியதும் தீபம் ஏற்றி வழிபடுவர்.

    திருப்பதி போலவே ஐந்தாம் நாள், கருடசேவையில் அமர்க்களமாக காட்சி தருவார் திருமால்! புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் முத்தங்கி சேவையில் காட்சி தரும் திருமாலைத் தரிசிக்க காண கண் கோடி வேண்டும்.

    • திருமலை அடிவாரத்தில் ஒரு ஏழைக்குயவன் வாழ்ந்து வந்தான்.
    • பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த பழக்கம் இன்று வரை கோவிலில் நடைபெற்று வருகிறது.

    சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது.

    புரட்டாசி சனிக்கிழமை இன்னும் சிறப்புடையதாக உள்ளது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதியை திருப்பதி சென்று முறைப்படி வழிபாடு செய்து அருள் பெற்றவர் நாரத மகரிஷி, தான் பெற்ற பலனை ஒரு ஏழைக் குயவனுக்கு அடைய வழிகாட்டினார்.

    திருமலை அடிவாரத்தில் ஒரு ஏழைக்குயவன் வாழ்ந்து வந்தான்.

    பீமன் என்ற அவன் உடல் ஊனமுற்றவன். அவன் தினமும் மண்பாண்டங்களைச் செய்துவிற்று பிழைப்பு நடத்தி வந்தான்.

    மண்ணினால் மலர்களைச் செய்து அம்மலர்களால் ஸ்ரீவேங்கடேஸ்வரப் பெருமானை அர்ச்சனை செய்து வந்தான்.

    ஒருநாள் அவனது கனவில் நாரத மகரிஷி தோன்றினார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வெங்கடாஜலபதியை வழிபடும் முறையை உபதேசித்தார்.

    மலை மீது ஏற முடியாத பீமய்யா தனது குடிசையிலேயே வழிபாடு நடத்த முடிவு செய்தான்.

    மண்ணால் வெங்கடாஜலபதியின் உருவத்தை செய்தான். மண்ணாலே மலர்கள் செய்து புரட்டாசி சனிக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபாடு செய்தான்.

    முறைப்படி விரதத்தைக் கடைப்பிடித்தான்.

    அதே சமயத்தில் நாட்டை ஆண்ட அரசர் தொண்ட மான் சக்கரவர்த்தி தங்க மலர்களால் சீனிவாசனைப் பூஜை செய்து வந்தான்.

    ஒருநாள் பொன்னாலான மலர்களால் அர்ச்சனை செய்தபோது அவை மண் மலர்களாகி விழுவதைப் பார்த்தான் அதிர்ச்சி அடைந்து பயந்து கண் கலங்கினான்.

    ஒருநாள் நள்ளிரவில் ஏழுமலையான் அரசனின் கனவில் வந்து அரசே! அருகில் வசிக்கும் பீமன் என்ற குயவன் என்னைத் தினமும் பக்தியுடன் மண் மலர்களால் பூஜை செய்கிறான்.

    ஆகையால் நீ பூஜைக்குப் பயன்படுத்தும் பொன்மலர்கள் மண் மலர்களாக மாறி விடுகின்றன என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் காலை இந்த உண்மையை அறியத் தொண்டமான் புறப்பட்டு சென்றான்.

    ஒரு குடிசையில் மண்ணினால் செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடாஜலபதியின் சிலைக்கு எதிரில் மெய்மறந்த நிலையில் மண் பூக்களால் அர்ச்சனை செய்யும் பீமனை கண்டான். குயவனுக்கு அரசன் உதவி செய்தான்.

    சில காலம் கழிந்த பின்னர் பீமன், புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்ததன் காரண மாக மோட்ச உலகை அடைந்தான்.

    தொண்டமான் இவ்வரலாற்றை அர்ச்சகர்களுக்குச் சொல்லி சீனிவாசனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண்பாண்டங்களிலேயே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த பழக்கம் இன்று வரை கோவிலில் நடைபெற்று வருகிறது.

    • குலதெய்வ பூஜைகளை செய்யவும் காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது.
    • இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும்.

    குலதெய்வ பூஜைகளை செய்யவும் காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது.

    புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக் கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர்.

    பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர்.

    பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர்.

    பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.

    குடும்பத்தினருடன் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு.

    புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும்.

    அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது.

    இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

    சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது.

    சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.

    • திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
    • இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.

    இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.

    இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திரு வுருவப்படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட் களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.

    சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட் டும் வைத்து பூஜை செய்வதுண்டு.

    துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

    புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    இதனால்தான் புரட்டாசி மாதம், புண்ணியம் தரும் மாதமாக கருதப்படுகிறது.

    • புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.
    • இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

    கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

    புரட்டாசியில் சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர்.

    இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.

    துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும்.

    பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம்.

    பூஜைக்கு வந்துதவிய அனைவருக்கும் விருந்தளிப்பது நல்லது. இதனால் கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான்.

    • இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
    • இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசியில் சனிக் கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன.

    புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது.

    அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.

    புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும்.

    இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

    புரட்டாசி சனிக் கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது,

    ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.

    மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்....''

    என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும்.

    இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    • சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
    • சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.

    இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.

    புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

    சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் ஏழுமலையானிடம் இருந்து அதிக அருளையும், பலனையும் பெற முடியும் என்பது பக்தர்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.

    அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.

    புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.

    எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
    • ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.

    இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.

    பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்பார்கள்.

    அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு.

    எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

    இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.

    ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.

    அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத் தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    • ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு ராக் (இரவு) காலம்.
    • இதை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதத்தில் அன்னை, நவராத்திரியில் கொலுவிருந்து பத்தாவது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்து அதனால் எழுந்த கோபத்தினால் உக்கிரமாக இருந்தாள்.

    பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றி துதித்ததன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக காட்சி அளித்தாள்.

    நவராத்திரி விரதம் இருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்று விரதம் இருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லா காரியங்களிலும் வெற்றியை பெறுவார்கள்.

    ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு ராக் (இரவு) காலம்.

    இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.

    நடுநிசியான புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும்.

    இந்த கோடி சந்திர பிரகாசத்தை சவுந்தர்ய லகரியில் அம்பிகையின் சவுந்தரியத்தை "உன்னுடைய புன்முறுவல் அமுதம் போன்றது.

    உன் முகமாகிய சந்திரனிடம் இருந்து பெருகும் அந்த அமுதம் போன்ற நிலவுக்கதிர்களை உண்ணும் சகோரப் பறவைகளுக்கு அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவற்றின் அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன.

    ஆகையால் அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கை புளித்த கஞ்சு என்று எண்ணி வேண்டிய மட்டும் இரவு தோறும் நிறைய பருகுகின்றன" என்று ஜகத்குரு ஆதிசங்கரர் கூறியிருப்பதாக தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சமயத்தில் தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளை பெறுவார்கள்.

    பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

    இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும்.

    இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயாமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

    இந்த சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும்.

    இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல தேஜசும், நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும்.

    இவர்களோ அல்லது இவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களோ எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.

    எதிரிகள் நண்பர்களாக மாறிவிடுவார்கள்.

    ×