search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sheikh Hasina"

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #SheikhHasina #RajnathSingh
    டாக்கா :

    வங்காளதேசத்தின் உள்துறை மந்திரி அசாதுஸமான் கான் விடுத்த அழைப்பை ஏற்று, இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 13 முதல் 15 வரை வங்காளதேசத்தில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேசினார். ‘பிரதமர் ஷேக் ஹசினாவுடனான இன்றைய சந்திப்பு சிறப்பான முறையில் அமைந்தது. இருநாட்டுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் எல்லைப்பாதுகாப்பு குறித்த முக்கிய விவகாரங்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசினாவை இந்தியாவிற்கு வருமாறும் தான் அழைப்பு விடுத்துள்ளேன்’ என சந்திப்பிற்கு பிறகு டுவிட்டரில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  
     
    இதைத்தொடர்ந்து, ராஜ்நாத் சிங் மற்றும் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய விசா அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

    மேலும், சுமார் 2 வருடங்களுக்கு பிறகு இருநாட்டு உள்துறை மந்திரிகள் இடையேயான சந்திப்பு நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #SheikhHasina #RajnathSingh
    வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. #SheikhHasina #HonoraryDLittKNU
    கொல்கத்தா:

    இருநாள் அரசுமுறை பயணமாக வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் பகுதியில் விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் ‘பங்களா தேஷ் பவன்’ கட்டிடத்தை ஷேக் ஹசினா திறந்து வைத்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம், பஸ்ச்சிம் பர்தமன் மாவட்டம், அசனால் நகரில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகம் இன்று ஷேக் ஹசினாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

    பட்டத்தை பெற்றுகொண்டு ஏற்புரை ஆற்றிய ஷேக் ஹசினா, வங்காளதேசம் நாட்டின் தேசிய கவியான காஸி நஸ்ருல் பெயரால் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டத்தை பெற்றதில் பெருமை அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கிய முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக வங்காளதேசம் நாட்டில் வாழும் அனைவருக்குமான பெருமிதம் என்று குறிப்பிட்டார்.

    இவ்விழாவில் அவர் பேசியதாவது:-

    பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா நடத்திய போரில் பல இந்திய வீரர்கள் மகத்தான உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை எல்லாம் எங்கள் நாட்டு மக்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள்.



    குறிப்பாக, எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பிறகு எனக்கும், என் தங்கை ஷேக் ரெஹானா உட்பட எங்கள் குடும்பத்தை சேர்ந்த 18 உறுப்பினர்களுக்கும் அரசியல் தஞ்சம் அளித்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் அளித்த ஆதரவை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது.

    இன்று புவியியல் அமைப்பின்படி, வங்காளதேசமும், மேற்கு வங்காளம் மாநிலமும் பிரிந்து இருக்கலாம். ஆனால், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் காஸி நஸ்ருல் என்னும் மிகச்சிறந்த கவிஞர்களை யாராலும் இந்த இருநாட்டு மக்களின் இதயங்களில் இருந்து பிரிக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #SheikhHasina #HonoraryDLittKNU
    மேற்குவங்காள மாநிலத்தில், வங்காளதேச பவனை திறந்து வைத்து பேசிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, ரவீந்திரநாத் தாகூரை சொந்தம் கொண்டாட அவர்களுக்கே அதிக உரிமை இருப்பதாக கூறினார். #BangladeshPM #SheikhHasina #Santiniketan #BangladeshBhavan

    கொல்கத்தா:

    வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேச பவன் என்ற பெயரில் புதிய அரங்கம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது.  இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேச பவனை திறந்து வைத்தனர். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.



    இந்த விழாவில் கலந்துகொண்ட வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா பேசியதாவது:-

    எந்தவொரு பிரச்சினையும் நட்பு பாராட்டுவதன் மூலம் தீர்க்க முடியும் என நான் நம்புகிறேன். நாம் இருவரும் அண்டை நாடுகள், எப்போதும் ஒன்றாக செயல்பட வேண்டும். அண்டை நாடுகளுக்கு இடையே சில பிரச்சினைகள் இருக்கலாம். பிரச்சினைகள் ஒவ்வொன்றாக சரிசெய்துள்ளோம். மற்ற சில பிரச்சினைகளை எழுப்பி இந்த விழாவின் சிறப்பை நான் உடைக்க விரும்பவில்லை.

    கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான பன்முக மற்றும் மல மரிமான உறவுகள் புதிய உட்சத்தை தொட்டுள்ளது. நமது உறவுகள், மூலோபாய உறவுகளுக்கு அப்பாற்பட்டவை. வங்களாதேசம்-இந்தியா இடையிலான இருதரப்பு உறவு பெரும்பாலும் உலகின் மற்ற நாட்களுக்கு முன் மாதிரியாக கருதப்படுகிறது. வங்களாதேச விடுதலை போர், பாங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய ஆய்வுகளை ஆய்வு செய்ய ஒரு சிறந்த மையமாக அமையும்.

    இரு நாட்டு தேசிய கீதத்தையும் எழுதியவர், ரவீந்திரநாத் தாகூர் ஆவார். அவரை சொந்தம் கொண்டாட இரு நாட்டுக்கும் உரிமை உள்ளது. அவர் பெரும்பாலான படைப்புகளை வங்காளதேசத்தில் வைத்து தான் எழுதியுள்ளார். அதனால் அவரை சொந்தம் கொண்டாட எங்களுக்கு அதிக உரிமை உள்ளது.

    இவ்வாறு ஷேக் ஹசினா பேசினார். #BangladeshPM #SheikhHasina #Santiniketan #BangladeshBhavan
    மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சாந்திநிகேதனில் வங்காளதேச பவனை பிரதமர் நரேந்திர மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் கூட்டாகத் திறந்து வைத்தனர். #BangladeshBhavan #SantiNiketan
    கொல்கத்தா:

    வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேச பவன் என்ற பெயரில் புதிய அரங்கம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது.  இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேச பவனை திறந்து வைத்தனர். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.



    வங்காளதேச பவன் இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை பறைசாற்றுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், 1971 ஆம் ஆண்டில் நடந்த விடுதலைப் போர் மற்றும் வங்காளதேசத்துடன் ரவீந்திரநாத் தாகூருக்கு இருந்த நட்புறவு ஆகியவற்றை காட்டும் ஒரு அருங்காட்சியகமும் இந்த வங்காளதேச பவனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #BangladeshBhavan #SantiNiketan
    ×