search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shastri"

    ரவிசாஸ்திரி, ராகுல் டிராவிட் நிலையில் நிர்வாகக் குழுவின் முடிவால் பிசிசிஐயின் பெரும்பாலான அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததுள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர உச்சநீதிமன்றம் லோதா தலைமையிலான் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு ஏராளமான பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    இதில் 90 சதவிகிதத்திற்கு மேலான பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதில் முக்கியமானது அரசியல் பதவியில் இருக்கும் நபர்கள், பிசிசிஐ பதவியில் இருக்கக்கூடாது. 70 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பதவி வகிக்கக்கூடாது. பிசிசிஐயில் இரண்டு சம்பளங்கள் பெரும் பதவியில் இருக்கக்கூடாது என்பது முக்கியமான அம்சங்கள் ஆகும்.

    பிசிசிஐ-யில் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது. லோதா கமிட்டியின் பரிந்துரை நடைமுறைக்கு வந்ததும் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டது. ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவரது ஒப்பந்தம் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்படும் வகையில் 10 மாதமாக இருந்தது.



    ஐபிஎல் தொடரில் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாயம் பெருவதாக கருதப்படும். ஐபிஎல் தொடரில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறதோ, அந்த சம்பளத்தை பிசிசிஐ அளிக்கும். அவரது ஒப்பந்நதம் 12 மாதமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் டிராவிட் பங்கேற்காமல் இந்தியா ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இதேபோல்தால் ரவிசாஸ்திரி வர்ணனையாளர் பதவியை உதறித் தள்ளினார்.

    இந்நிலையில் ரவிசாஸ்திரி, ராகுல் டிராவிட் நிலையில் நிர்வாகக்குழு மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வகையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ வட்டாராங்கள் தெரிவித்துள்ளன. நிர்வாகக்குழுவின் இந்த முடிவு பிசிசிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
    ×