search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand abduction"

    சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக வில்லியனூர் துணை தாசில்தார் நித்யானந்தத்துக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து துணை தாசில்தார் நித்யானந்தம் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்கள் துணை தாசில்தாரை பார்த்ததும் 4 மாட்டு வண்டிகளையும் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்துஅந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாட்டு வண்டிகள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் வில்லியனூர் போலீசார் கூடப்பாக்கம் ரோடு மூர்த்தி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சங்கராபரணி ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கணுவாப்பேட்டையை சேர்ந்த பழனி (வயது 32) மற்றும் தேவராஜ் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உத்தமபாளையம் அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமல்லாது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    போலீசார் ரோந்து சென்று மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை கைது செய்தபோதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. உத்தமபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் கோம்பை சாலையில் ரோந்து சென்றனர்.

    அம்மாபட்டி பிரிவு அருகே வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிவராஜ்(வயது28) என்பவரை கைதுசெய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அனுமிதியின்றி மணல் கடத்திய 2 லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள கொண்டமா நல்லூர் கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான 2 லாரிகளை போலீசார் மடக்கினர்.

    உடனே லாரிகளில் இருந்த டிரைவர்கள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    லாரிகளில் போலீசார் சோதனை செய்த போது அதில் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணலுடன் லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

    மணல் யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    வடமதுரை அருகே டிப்பர் லாரிகளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள சந்தனவர்த்தினி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து வடமதுரை போலீசார் நேற்று ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது டிப்பர் லாரிகளில் 2 பேர் மணல் அள்ளி கடத்த முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். லாரிகளையும் பறிமுதல் செய்து கொண்டு வந்தனர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டது திண்டுக்கல் ராஜக்காபட்டியைச் சேர்ந்த பழனி முத்து (33), நாகல்நகரைச் சேர்ந்த துரைராஜ் என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பாகூர் அருகே மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங் குப்பம் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக புகார் வந்ததை அடுத்து கவர்னர் கிரண்பேடி நேற்று பாகூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மணல் கடத்தலை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் 2019-ம் ஆண்டில் மணல் கடத்தல் வழக்கே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று போலீசாருக்கும், அங்கிருந்த வருவாய்துறையினருக்கும் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் மணல் கடத்தலை தடுக்க சோரியாங்குப்பம், குருவி நத்தம், கொமந்தான்மேடு, சித்தேரி அணைக்கட்டு ஆகிய 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட போலீசார் மணல் கடத்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்று பகுதியில் இன்று காலை 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை வருவாய்துறையினர் கைப்பற்றி பாகூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அவை யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி அருகே பெரியாற்றில் மணல் கடத்திய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் மணல் கடத்தும் கும்பலை கைது செய்து அபராதம் விதித்தபோதும் இது தொடர்ந்து வருகிறது. அரசு அனுமதியின்றி நீர் நிலைகள் மற்றும் பெரியாற்றில் அதிக அளவு மணல் அள்ளப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி அருகே ஜங்கால்பட்டி, லெட்சுமிபுரம் பகுதியில் வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது பெரியாற்று படுகையில் மணல் அள்ளிக் கொண்டு 4 மாட்டு வண்டிகள் வந்தது. அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. எனவே இது தொடர்பாக லெட்சுமிபுரததைச் சேர்ந்த பரமன், இந்திரஜித், கிருஷ்ணசாமி, கிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குடிநீருக்கு அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    மணல் கடத்தும் கும்பலை போலீசார் பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி சித்தர்கள் நத்தம் சுடுகாட்டு பகுதியில் வைகை ஆற்று படுகையில் ஒரு கும்பல் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தது. இதை பார்த்தகிராம நிர்வாக உதவியாளர் விளாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கும்பலில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மணல் அள்ளிய செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பெரியசாமி, செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பகுதியில் சராசரிக்கும் குறைவாகவே மழை பொழிவு உள்ளதால் நீர்நிலைகள் பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

    ஓடை, குளம் ஆகியவற்றில் சமூக விரோத கும்பல் மணல் கடத்தி வருகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடிநீருக்காகவும் பொதுமக்கள் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. போலீசார் ரோந்து சென்று மணல் கொள்ளையர்களை கைது செய்தபோதும் மணல் கடத்தலை தடுக்க முயடிவில்லை.

    இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா தலைமையில் போலீசார் கொசவபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது மெயின் ரோடு பகுதியில் ஒரு டிராக்டர் வேகமாக வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்டபோது மணல் கடத்தியது தெரிய வந்தது.

    போலீசாரை கண்டதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். டிராக்டரை பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. போடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கரட்டுப்பட்டியில் இருந்து வேகமாக டிராக்டர் ஒன்று வந்தது.

    டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் அரசுக்கு சொந்தமான ஓடைப் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணல் கடத்திய பெருமாள் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மகாதேவன் (வயது 40) என்பவரை கைது செய்து டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஜா மைதீன் மற்றும் போலீசார் அசையாமணி விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது 4 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் சாக்கு மூடைகள் இருந்தன. எனவே சந்தேகத்தின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் நிற்காமல் சென்று விட்டார். மற்ற 3 பேரையும், 3 மோட்டார் சைக்கிள் களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அனுமதியின்றி மோட்டார் சைக்கிள்களில் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மணல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ் ணன் (வயது 43), மூர்த்தி (43), மற்றொரு ராதாகிருஷ்ணன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கருப்பசாமி என்பரை தேடி வருகின் றனர்.

    அரக்கோணம் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாசில்தார் பாபு மற்றும் வருவாய்துறையினர் நேற்று பெருமூச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.அதிகாரிகளை கண்ட லாரி டிரைவர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன் படுத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூல வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. கண்டமனூர் சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். லாரியை சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முத்தனம்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×