என் மலர்
நீங்கள் தேடியது "c"
தேனி:
உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமல்லாது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போலீசார் ரோந்து சென்று மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை கைது செய்தபோதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. உத்தமபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் கோம்பை சாலையில் ரோந்து சென்றனர்.
அம்மாபட்டி பிரிவு அருகே வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிவராஜ்(வயது28) என்பவரை கைதுசெய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் தாசில்தார் பாபு மற்றும் வருவாய்துறையினர் நேற்று பெருமூச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.அதிகாரிகளை கண்ட லாரி டிரைவர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.






