search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "run out most partners IPL"

    ஐபிஎல் தொடரில் எதிர்முனையில் விளையாடும் பேட்ஸ்மேன்களை ரன்அவுட் ஆக்கியதில் டோனி ரோகித் சர்மாவுடன் இணைந்து முதல் இடம் பிடித்துள்ளார். #IPL2018 #RRvCSK
    ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லரின் அபாரமான ஆட்டத்தால் (60 பந்தில் 95 ரன்கள்-அவுட் இல்லை) ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை சாம் பில்லிங்ஸ் - டோனி எதிர்கொண்டனர். இந்த ஓவரின் 4-வது பந்தில் சாம் பில்லிங்ஸ் ரன் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. அப்போது டோனி ஓடுவதற்கு முயன்றார். இதனால் சாம் பில்லிங்ஸ் வேகமாக ஓடினார். டோனி திரும்பி சென்றதால், விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்கை ரன்அவுட் செய்தார்.



    இந்த ரன்அவுட் மூலம் எம்எஸ் டோனி ஐபிஎல் தொடரில் 12 முறை எதிர்பேட்ஸ்மேன்களை ரன்அவுட் ஆக்கி ரோகித் சர்மா உடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தினேஷ் கார்த்தி 19 முறை ரன்அவுட்டாக்கி 2-வது இடத்திலும், உத்தப்பா 18 முறை அவுட்டாக்கி 3-வது இடத்தையும், விராட் கோலி 17 முறை அவுட்டாக்கி 4-வது இடத்தையும், ரெய்னா 15 முறை அவுட்டாக்கி 5-வது இடத்தையும், யூசுப் பதான் 14 முறை அவுட்டாக்கி 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
    ×