search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relocation"

    • திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
    • பல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்பிரபு, தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    நிர்வாக வசதிகளுக்காக, திருப்பூர் மாவட்டத்தில், 4 துணை தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்

    அதன்படிபல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்பிரபு, தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலரான தேன்மொழி, பல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் சையது ராபியம்மாள், உடுமலை தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும் இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    உடுமலை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சாந்தி, திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமனங்கள் தொடர்பாக, எவ்வித கோரிக்கைகள் மற்றும் மேல் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.மேற்கண்ட அலுவலர்கள், மாற்றுப்பணியிடம் கோரி மனு செய்தாலோ அல்லது மாறுதலைதவிர்க்கும் வகையில் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தாலோ, மாறுதல் செய்த பணியிடத்தில் சேர தவறினாலோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • திருப்பூரில் இருந்த சண்முகசுந்தரம், ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    திருப்பூர்:

    நிர்வாக வசதிக்காக திருப்பூர் மின்வாரியத்தில் பணியாற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவு செயற்பொறியாளர்கள் (நிலை - 1), 98 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இருந்த செயற்பொறியாளர் ராமச்சந்திரன், திருப்பூர் பகிர்மான வட்ட செயற்பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூரில் இருந்த சண்முகசுந்தரம், ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    பல்லடம் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சத்யா, கோவை வடக்கு பகிர்மானத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பல்லடத்தில் இருந்த ஷர்மிளா கோவை வடக்கு மின்பகிர்மானத்துக்கும் மாற்றப்பட்டுள்ளார். தர்மபுரியில் இருந்த திருஞானசம்பந்தர் பல்லடம் (பொது) செயற்பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார்.அவிநாசி செயற்பொறியாளர் விஜயேஸ்வரன், பல்லடத்துக்கு மாற்றப்பட்டு சேலத்தில் இருந்த பரஞ்ஜோதி, அவிநாசிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த அலுவலகத்தில் பொறுப்பேற்று, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • செஞ்சி பஸ் நிலையம் விரிவாக்க பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டது.
    • தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர்.

     விழுப்புரம்:

    செஞ்சி பஸ் நிலையம் ரூ 6.74 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு பழைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பஸ் நிலையத்தை திண்டிவனம் சாலையில் உள்ள தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் அனைத்து பஸ்களும் வந்து சென்றுகொண்டிருந்தன. 

    இந்நிலையில் ஏற்கனவே செஞ்சி கடைவீதியில் கழிவுநீர் கால்வாய் விரிவுபடுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பணி தற்போது பஸ் நிலையத்தில் இருந்து கூட்டு ரோடு வரை தொடங்கியுள்ளதால் கூட்ரோடு பகுதியில் சிறு பாலம் அமைக்க சாலை தடுக்கப்பட்டதாலும் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வரமுடியாமல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர். இதனால் கூட்ரோடு பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.

    எனவே செஞ்சி கூட்டுச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் படுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சென்னை செல்லும் பஸ்கள் உட்பட அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×