search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale discussion"

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு பயந்து காங்கிரஸ் பின்வாங்குவதாக மத்திய மந்திரி விஜய் கோயல் குற்றம்சாட்டினார். #RafaleDiscussion #VijayGoel
    புதுடெல்லி:

    மேகதாது விவகாரம், ரபேல் மற்றும் சீக்கிய கலவர வழக்குகளின் தீர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இன்று மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி விஜய் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல், காவிரி நதிநீர், ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐ என அனைத்து விவகாரங்களுக்கும் விவாதங்கள் வாயிலாக மட்டுமே தீர்வு காண முடியும். ரபேல் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதம் நடத்துவதில் இருந்து காங்கிரஸ் பின்வாங்குகிறது. அதற்கு பதிலாக முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளை இரு அவைகளிலும் எழுப்புகிறது.



    எந்த பிரச்சினையாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன்மூலம், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்பி வருவது தெளிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #RafaleDiscussion #VijayGoel
    ×