search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus one student"

    வில்லியனூர் அருகே டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே வடமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி.

    இவர் திருபுவனையில் உள்ள தனியார் மாத்திரை கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 16). இவர் அரியூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சந்தோஷ் அதிக சத்தத்துடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் புஷ்பா பாடம் படிக்காமல் ஏன் டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? என்று சந்தோசை கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த சந்தோஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் படுக்கை அறை கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    அறை கதவு வெகு நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த புஷ்பா ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சந்தோசை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவியை வாலிபர் கடத்தி சென்றார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இவரை நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்தார்.  இதனை மாணவி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் அந்த வாலிபரை கண்டித்துள்ளனர். இருந்தாலும் அந்த வாலிபர், மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த வாலிபர் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை கடத்தி சென்றுள்ளார். வீடு திரும்பிய பெற்றோர் வீட்டில் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர்.

    அவரை அருகில் உள்ள உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தனது மகளை அந்த வாலிபர் கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்- இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் வாலிபர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
    ×